- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர்களை காலி செய்ததே அந்த நடிகர்கள்ளதான்… இனி தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட மாட்டோம் -...

தயாரிப்பாளர்களை காலி செய்ததே அந்த நடிகர்கள்ளதான்… இனி தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட மாட்டோம் – திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் அதாவது நட்சத்திர அந்தஸ்தில் உள்ள சிலர் மட்டுமே தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். மற்ற பெரும்பாலான நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி உள்ளனர். அதிலும் துணை நடிகர்கள் பெரும்பாலானோர் நடிக்க வாய்ப்பின்றி வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.

இதற்கு முக்கிய காரணம் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை. குறிப்பாக வி சேகர் விசு போன்றவர்கள் இயக்கிய சின்ன பட்ஜெட் படங்கள் போல இப்போது எந்த படங்களுமே வருவது இல்லை. பெரிய படங்களை 300 கோடி 400 கோடி ரூபாய் என செலவு செய்து எடுத்துவிட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் தவிக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் 100 கோடி 150 கோடி 200 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகர்கள் ஹாயாக இருக்கின்றனர். இதே சூழல் காரணமாக இனி பெரிய நட்சத்திர நடிகர்களுக்கும் பட வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும். அதனால் புதிய படங்களே வராமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். மேலும் 4 வாரங்களில் புதிய படங்கள் ஓடிடி வந்து விடுவதால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டமே இருப்பதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பதாவது, 100 கோடி 150 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கியவர்கள் இன்று சூட்டிங் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் எல்லா தயாரிப்பாளர்களையும் அவர்கள் காலி செய்து விட்டார்கள்.

- Advertisement -

இதை செய்தது எல்லாம் அந்த பெரிய நடிகர்கள்தான். வருகிற 2026ம் ஆண்டு முதல் தொடங்கப்படும் புதிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். இதை கடைபிடிக்காத படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வருகிற டிசம்பர் 9ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஓடிடி தளங்களுக்கு 8 வாரங்களுக்கு பிறகே புதிய படங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியாக முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்திருக்கின்றனர். எனவே இனி 2026ல் ஒப்பந்தம் போடப்படும் படங்கள் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடிக்கு வரும் நிலை உருவாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்