- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு - இதுவும்...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு – இதுவும் ஆக்சன் கிங் நடித்த படத்தின் டைட்டில் தானுங்க!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீலீலா ஜெயம் ரவி மற்றும் அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அமரன் படத்தைப் போலவே இந்த முறையும் சிவகார்த்திகேயன் பயோபிக் படத்தில்தான் நடிக்கிறார். அமரன் படத்தில் முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவர் இராசேந்திரன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

கடந்த 1985ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 17ம் தேதி திருச்சியில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். 12 ஆண்டுகளுக்கு முன் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் பிரபல நடிகராக மாறினார். கடந்தாண்டில் வெளியான அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகராக அவர் மாறியிருக்கிறார். அவரது சம்பளமும் ரூ.75 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இன்று சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைதள பக்கத்தில், பராசக்தி படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார். நடிகர் கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரசிகர்கள் எஸ்கேவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். எஸ்கே 23 என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் டீசர், எஸ்கேவின் பிறந்த நாளான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் என்றாலே அது பழைய படங்களின் டைட்டிலாகவே பெரும்பாலும் இருக்கிறது. எதிர்நீச்சல் காக்கிசட்டை வேலைக்காரன் ஹீரோ மாவீரன் அமரன் பராசக்தி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படமும் பழைய டைட்டிலாகும். கடந்த 2006ம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் வேதிகா நடிப்பில் வெளியான படம்தான் மதராஸி. இந்த படத்தில் இயக்குனரே நடிகர் அர்ஜூன்தான். இந்த முறை அர்ஜூன் பட டைட்டிலை காப்பியடித்து சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏஆர் முருகதாஸ் டைட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/_t-t8mG_vUY?si=rzfOa0gFF-6GxMgX

- Advertisement -

சற்று முன்