- Advertisement -
Homeபொழுதுபோக்குகையில் தேன் குழலுடன் விஜயின் தவெக கொடியை பதிவிட்டாரா த்ரிஷா... அப்போ மாநாட்டில் பங்கேற்பாரா... உண்மை...

கையில் தேன் குழலுடன் விஜயின் தவெக கொடியை பதிவிட்டாரா த்ரிஷா… அப்போ மாநாட்டில் பங்கேற்பாரா… உண்மை நிலவரம் என்ன…

- Advertisement -

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன. மாநாட்டு மேடை முதல் பல்வேறு இடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

 

- Advertisement -

மாநாட்டில் விஜய்க்கு 35 அடி உயரத்தில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே, பெரியார், அம்பேத்கர் காமராஜர் வேலு நாச்சியார் அஞ்சலையம்மாள் ஆகியோருக்கும் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் மாநாட்டு வாசலில், சேர சோழ பாண்டியர்களுக்கும் தமிழ் அன்னைக்கும் கட்டவுட் வைக்கப்பட்டிருக்கிறது.

 

- Advertisement -

மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வரவேண்டும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மது அருந்திவிட்டு தொண்டர்கள் மாநாட்டிற்கு வருகை தரக்கூடாது எனவும் தமிழக வெற்றி கழகம் தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. மது அருந்தியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொன்றையும் அக்கட்சித் தலைமை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்க பலரது கவனமும் விஜயின் பேச்சு மீது சென்றுள்ளது.

 

மாநாட்டுக்கு கொள்கை வெற்றி திருவிழா என பெயர் வைத்திருக்கிறார்கள். அதில் விஜய், என்ன பேசப் போகிறார், அவரின் அரசியல் பார்வை என்னவாக இருக்கப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாநாட்டில் திரிஷா பங்கேற்கப் போவதாக பலரும் இணையத்தில் கூறி வந்தார்கள்.

 

விஜயை விமர்சிக்கும் விதமாக கேலி கிண்டல் என்ற பெயரில் தரக்குறைவாக பலரும் பதிவிட்டனர். ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத திரிஷா, தற்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் அஜித் குமாரின், குட் பேட் அக்லி திரைப்பட ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளார். காரில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அவர், கையில் தேன்குழல் வைத்திருக்கும் காட்சியை பதிவிட்டு ஸ்பெயின் நாட்டு கொடியை போட்டு இருக்கிறார். ஆனால் அது தவெக கொடி என நினைத்து பலரும் போஸ்ட் செய்வது நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.

 

- Advertisement -

சற்று முன்