- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஹீரோவும் பண்ணாத அட்வைஸை செய்த நடிகர் சசிக்குமார், விழா மேடையில் இயக்குனருக்கு...

ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஹீரோவும் பண்ணாத அட்வைஸை செய்த நடிகர் சசிக்குமார், விழா மேடையில் இயக்குனருக்கு விடுத்த எச்சரிக்கை – பெரிய மனுசன் பெரிய மனுசன்தாய்யா!

- Advertisement -

நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்ற 3 அடையாளங்களை கொண்டவர். பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் சில படங்களை அவரே டைரக்ட் செய்தார். சில படங்களை அவரே தயாரிக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் தயாரித்த படங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க கடனாளியாக மாறி மிகவும் சிரமப்பட்டார்.

அவர் வசதியாக வாழ்ந்த போது அவருடன் இருந்த சிலர், கடனாளியாக கஷ்டப்பட்ட போது அவருடன் இல்லாமல் காணாமல் போய்விட்டனர். எனினும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் தன் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து டூரிஸ்ட் பேமிலி படம் மூலம் சசிக்குமார் மீண்டும் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த டூரிஸ்ட் பேமிலி வெற்றி விழாவில் பேசிய நடிகர் சசிக்குமார், தோல்விகளை எப்பவும் ஒத்துக்கொள்ள வேண்டும். நான் தோற்றுப்போனேன் என்று சொல்வதில் எந்த சங்கடமும் இல்லை. இதை பல இடங்களில் நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசினார்.

எந்த ஒரு நடிகருமே குறிப்பாக அறிமுக நடிகர் கூட தனது படப்பிடிப்பில் நிறைய செலவுகளை செய்யவே விரும்புவார். இயக்குனருடன் சேர்ந்துக்கொண்டு தயாரிப்பாளருக்கு நிதி சுமையை ஏற்றுவர். ஆனால் டூரிஸ்ட் பேமிலி படப்பிடிப்பின் போது, தயாரிப்பாளரிடம் இதற்கு இவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்யாதீங்க என்று நடிகர் சசிக்குமாரே அட்வைஸ் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதைப் பார்த்து தயாரிப்பாளரும் படக்குழுவினரும் நடிகர் சசிக்குமாரை அதிசயமாக பார்த்திருக்கின்றனர். ஆனால் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 50 கோடிகளை கடந்து மாபெரும் லாபத்தை தந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக தனக்கு ஏற்பட்ட நஷ்டம், மற்ற தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில் சசிக்குமார் அந்த அட்வைஸை செய்திருக்கிறார்.

மேலும் மேடையில் பேசிய நடிகர் சசிக்குமார், டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் குறித்தும் பேசிய போது அவரை எச்சரிக்கும் விதமாக பேசினார். முதல் படம் மாபெரும் வெற்றி. அதனால் அடுத்த படம் இயக்கும்போது மிக கவனமாக உஷாராக இருக்க வேண்டும். இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அதுதான் உன் முதல் படம் போல நீ பணி செய்ய வேண்டும் என்று நடிகர் சசிக்குமார் அறிவுரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்