- Advertisement -
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கிலோ 30 ரூபாய்க்கு சன்ன ரக பொன்னி அரிசி வழங்கப்படும் என்றது அரசு. ஆனால் ரேசன் கடைகளில் வழக்கமாக தரும் இலவச அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்கிறார்கள் என தமிழ்நாடெங்கும் பொது மக்கள் கொதித்தெழுகின்றனர். கம்பத்தில் பாலிஷ் அரிசியை கொடுத்ததால் ஆளுங்கட்சி எம்எல்ஏவை மக்கள் முற்றுகையிட்டதும் அவர் ஓட்டம் பிடித்ததும்தான் இந்த அரசின் மாற்றமா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.





