நேற்று நடந்த நிறைவு நாள் சட்டசபை கூட்டம் நிகழ்ச்சியில் கவர்னர் உரைக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக புகார் கூறினார். இதனால் ஆவேசமடைந்த திமுக கட்சி எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, டிரெய்லர் லான்ச் பங்ஷன் ஆடியோ லான்ச் பங்ஷன்தான் அவரோட பாணி. அதைதான் சட்டசபையிலும் அவர் கடைபிடிக்கிறார். சட்டமன்றத்தை ஒரு சினிமா தியேட்டர் போலவே ஆக்கிட்டாங்க. இன்னிக்கு விசில் எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இது எல்லாம் சபையே பார்க்காதது. இன்னும் கொஞ்ச நேரத்துல டான்ஸ் எல்லாம் ஆட ஆரம்பிச்சிடுவாருன்னு நெனைக்கிறேன். அயிட்டம் சாங் எல்லாம் போடுவாங்கன்னு நினைக்கிறேன். முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவில் டிரண்ட் ஆகணும்ன்னு சொல்லி இதெல்லாம் பண்றாங்க. முதலமைச்சர் இன்னிக்கு ஒரு அரைமணி நேரம் பேசியிருக்கார்ன்னா அதில் இருந்து ஒரு 10 ரீல்ஸ் தேறும்.
பிளான் பண்ணிதான் பண்றாங்க. எல்லாமே ஸ்கிரிப்ட்டா தான் இருக்கு. இது நாங்க எதிர்பார்த்ததுதான். ஆனால் ஓரளவுக்கு மேல பொறுத்துக்க முடியலே. ரொம்ப ஆர்ட்டிபிஷலா பேசறார். இங்கேயும் நடிக்க ஆரம்பிச்சிட்டார். சபாநாயகர் இனிமேல் ஆக்சன் கட் எல்லாம் இனி சொல்லுவார்ன்னு நெனைக்கிறேன். ஒன்மோர் எல்லாம் போவாங்கன்னு நினைக்கிறேன்.
ஸ்பீக்கர் கிட்ட அனுமதி வாங்கி ஆக்சன் பண்ணலாமான்னு கேட்கிறார். ஸ்பீக்கர் ஆக்சன் அப்படீங்கறார். இனிமேல் இங்க கேரவன் எல்லாம் வந்துடுமுன்னு நினைக்கிறேன். கேரவன் மேக்கப் ஸ்டண்ட் மாஸ்டர் எல்லாருமே வந்துடுவாங்க. சட்டமன்றத்தை கிட்டத்தட்ட ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்திட்டு இருக்காங்க.
இப்போது முதல்வருக்கு டைரக்டர் ஒருவர் தேவை. சபாநாயகர் டைரக்டராக இருக்கிறார். அமைச்சர்கள் துணை சபநாயகர் போன்றவர்கள் உதவி டைரக்டர்களாக இருக்கின்றனர். சபை நேரம் முடிந்த நிலையில் நாங்கள் வீட்டுக்கு போன பிறகு அமைச்சர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி காமெடி டைம் ஆக சட்டசபையை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.





