- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா அடுத்த வாரம் இத்தனை தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா... எந்தப் படத்திற்கு புக் பண்ணப்...

அடேங்கப்பா அடுத்த வாரம் இத்தனை தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா… எந்தப் படத்திற்கு புக் பண்ணப் போறீங்க மக்கா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு மாதங்களாக முக்கியமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் இங்கு சோகமான விஷயம். கடந்த மாதம், மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 மற்றும் ராயன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

 

ஆனால் இந்த திரைப்படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதிலும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. படத்தை திரையரங்குகளில் வெளியான போது கலாய்த்தது போதாது என்று தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும்போதும், ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

ராயன் திரைப்படமும் விமர்சன ரீதியாக பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் சினிமா விமர்சகர்கள் பலரும் அது நன்றாக இருப்பதாக பொய் செய்தியை பரப்பியதால் வசூல் குவிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட தற்போது வரை அந்த திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறது.

 

இது ஒரு பக்கம் இருக்க, அண்மையில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. டிமான்டி காலனி 2 கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி, முக்கியமான திரைப்படங்கள் வெளியாகின்றன. இதெல்லாம் முதலில் பார்க்கப் போவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் வாழை திரைப்படம்.

 

சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் கலையரசன் திவ்யா துரைசாமி நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் சொந்த வாழ்க்கையில் இருந்து இந்த கதை எடுக்கப்பட்டிருக்கிறதாம். சந்தோஷ் நாராயணன் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடித்தன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.

 

ஆனால் தற்போது வரை வாழை திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகவில்லை. அடுத்ததாக சூரி நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படமும் அதே தேதியில் தான் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை, பி எஸ் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே இவர் கூழாங்கல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

 

கூழாங்கல், கொட்டுக்காளி என இரண்டு திரைப்படங்களுமே சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளி இருக்கிறது. இதனால் வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு திரைப்படங்களுக்கு மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபோக கருணாஸ் விமல் நடித்திருக்கும் போகும் இடம் வெகுதூரமில்லை திரைப்படமும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகிறது. அதர்ம கதைகள், சாலா, நாற்கர போர் உள்ளிட்ட திரைப்படங்களும் அன்றைய தேதியில் வெளியாகின்றன.

சற்று முன்