- Advertisement -
Homeபொழுதுபோக்குகவலையே படாதீங்க வாடிவாசல் திரைப்படம் நடக்கும்... ஆனால் ஹீரோதான் மாறப் போறாராம்... அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்...

கவலையே படாதீங்க வாடிவாசல் திரைப்படம் நடக்கும்… ஆனால் ஹீரோதான் மாறப் போறாராம்… அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்…

- Advertisement -

வாடிவாசல் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அது தொடர்பான பிரச்சனைகள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து, வாடிவாசல் கதைகளத்தை கையில் எடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன். சி சு செல்லப்பா எழுதிய மிகச்சிறிய நாவலான வாடிவாசலின் கதையைத்தான் அவர் திரைப்படமாக எடுப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யா தான் கதாநாயகன் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தை தயாரிக்க கலைப்புலி எஸ் தாணு முன்னுக்கு வந்தார். இதற்கு வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காளைகளுடன் பயிற்சி மேற்கொள்ளவும் சூர்யா கிளம்பினார். இதற்காக, ஜல்லிக்கட்டு வீரர்கள் வரவழைக்கப்பட, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வேலைகள் நடைபெற்றன. அது தொடர்பான சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இப்படியான சமயத்தில் சூர்யா அடுத்தடுத்து ஒப்புக்கொண்ட திரைப்படத்தின் காரணமாக, வாடிவாசல் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் தள்ளிப் போயின.

அதற்குள் இன்னொரு படத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்த, வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கச் சென்றார். மிகக் குறுகிய காலத்திலேயே இந்த படத்தை எடுத்து முடிக்க அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கதைக்குள் அவர் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்ததன் காரணமாக, அதை சூட்டிங் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இருப்பினும் அவ்வப்போது லண்டனுக்கு சென்று, வாடிவாசல் தொடர்பான கிராபிக்ஸ் பணிகளில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் இதன் நடுவே, வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட போவதாக அவ்வபோது அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை தயாரிப்பு நிறுவனமும், வெற்றிமாறனும் தொடர்ந்து மறுத்து வந்தனர். சூர்யா இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனம் காத்தே இருந்தார். இப்படியான சூழலில், வாடிவாசல் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தனது நண்பரான அமீரை அழைத்தார் வெற்றிமாறன்.

இதற்கு அமீரும் ஒப்புக்கொள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் பருத்திவீரன் பட விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, சூர்யாவின் குடும்பத்திற்கும் அமீரின் தரப்பினருக்கும் மோதல் போக்கு எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் கடைசிவரை சூர்யா குடும்பத்தினர் மௌனம் காத்தனர். அதேசமயம் அமீர், வாடிவாசல் திரைப்படத்தின் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவே கூறி வந்தார். ஆனால் சூர்யாவுக்கு இதில் துளி அளவு கூட விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் தற்போது வெற்றிமாறன் விஜயின் அடுத்த படத்தை எடுப்பதில் கவனம் செலுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவங்கள் சூர்யாவுக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம், வாடிவாசலுக்கான கதையில் நடிக்க தனுஷ் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகவும் திரைத்துறையில் பேசப்படுகிறது. இதனால் அந்தக் கதை தனுசுக்கே செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, வடசென்னை திரைப்படம் முதலில் தனுசுக்கு சென்று, பிறகு சிம்பு வசம் மாறியது. ஆனால் கடைசி கட்டத்தில் மீண்டும் தனுஷ்கே அந்த படம் போக, அதில் சிறப்பாக அவர் நடித்து முடித்தார். இப்படியான சூழலில் தான் வாடிவாசல் திரைப்படமும், தனுஷிடம் செல்லலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாலே தெரியும் என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்