நடிகர் வடிவேலு பல படங்களில் மிகச்சிறந்த காமெடி காட்சிகளை தந்து ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்தவர். சில படங்களில் கதையுடன் அவரது காட்சிகள் சேர்ந்து வரும். சில படங்களில் வடிவேலு காமெடி காட்சிகள் தனி டிராக்காக வரும். எனினும் இரண்டு விதமான காமெடி சீன்களுமே வடிவேலுவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண் நடித்த படம் வின்னர். இந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள கேரக்டரில் நடித்து, காமெடியில் கலக்கி இருப்பார் வடிவேலு. இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தாலும், வடிவேலு காமெடி பெரிய வெற்றியை படம் என்றால் அது வின்னர்தான். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு? என்ற வடிவேலு டயலாக் இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது
அதே போல், பேக்கரி கடை நடத்தும் வீரபாகு கேரக்டரில் வடிவேலு நடித்த கிரி படம் சுந்தர் சி இயக்கியது. இந்த படத்தில் வடிவேலு கெட்டப்பும், நடிப்பும் வேற லெவலில் இருந்தது. இதில் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என முட்டுச்சந்தில் 11 பேரிடம் அடிவாங்கிய சம்பவத்தை சொல்லி அழும் காமெடி காட்சியிலும் அசத்தியிருப்பார். அர்ஜூன் நடித்த இந்த படமும் வடிவேலு காமெடிக்காக பேசப்பட்ட படமாக இருந்தது.
அடுத்து நகரம் படத்தில், வடிவேலு நடிப்பு அசத்தலாக இருக்கும். சுந்தர் சி இயக்கி, அவரது ஹீரோவாக நடித்த இந்த படத்திலும் வடிவேலு காமெடியில் அதகளம் செய்திருப்பார். இதில் சுந்தர் சியை ஒவ்வொரு இடமாக அடிக்க கூப்பிட, கடைசியில் அவர் எல்லா இடத்துக்கும் வந்துவிட, கடைசியில் இதுதாம்பா எண்டு, இதுக்கு மேல போக இடமில்லை என்று சுந்தர் சி காலில் விழுந்து அழுவார் வடிவேலு. இந்த படமும் ஓடாத போதும் வடிவேலு காமெடி ஜெயித்தது.
இந்த படங்களுக்கு எல்லாம் முன்னதாக சுராஜ் இயக்கிய தலைநகரம் என்ற படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் நாய் சேகர் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் வடிவேலு. இப்படி சுந்தர் சியுடன் நடித்த படங்களிலும், சுந்தர் சி இயக்கிய படங்களிலும் அவர்களது காமெடி காம்பினேஷன் பெரிய அளவில் சக்சஸ் ஆனது. ஆனால் அந்த 4 படங்களுடன் அவர்களது நட்பும், தொடர்பும் அறுந்து போய்விட்டது.
இந்நிலையில் சுந்தர் சி – வடிவேலுவு மோதல், திரையுலக நட்பு முறிந்து போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களில் காமெடிக்கு நடிகர் சந்தானத்தை, சுந்தர் சி நடிக்க வைத்தார். இது வடிவேலுவுக்கு அந்த படங்கள் ரிலீசான பிறகுதான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுந்தர் சியிடம் பேசுவதை தவிர்த்த வடிவேலு, அவரது படங்களிலும் நடிக்கவில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இதுபற்றி அறிந்த சுந்தர் சியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட்டார்.





