திரைப்பட பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி நேற்று இரவு மறைந்தார். 88 வயதான நிலையில் மூப்பு காரணமாக அவர் மறைந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 15 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் ஒளிப்பதிவாளர் செழியன் என அடுத்தடுத்து மறைந்த நிலையில் இப்போது திரைப்பட பின்னணி பாடகி எஸ் ஜானகியும் மறைந்து இருப்பது மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் நேற்றிரவு மறைந்த எஸ் ஜானகியின் மறைவுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் பாடகி எஸ் மறைவு குறித்து இரங்கல் கவிதைடய பதிவு செய்திருக்கிறார். அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, கானக் குயிலே காலமானாயா? அரை நூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?
சிங்கார வேலனே தேவா வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?
நாதம் என் ஜீவனே என்றாயே உன் நாதம் இருக்கிறது ஜீவன் இல்லையே. சிரித்த முகமும் சிவப்பு நிலாப் பொட்டும் ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவது போல் செவ்வாய் அசைக்கும் அழகும் கண்களை விட்டுக் காணாமல் போகுமோ! நீ பாட முடியாத பாடலென்று எதுவும் இல்லை உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை.
கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே. அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன். வாழ்க நீ அம்மா என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





