- Advertisement -
Homeபொழுதுபோக்குசேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் இதுதானா? - தயாரிப்பாளர் கமல்ஹாசன் போட்ட கணக்கு ஒர்க் அவுட்...

சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் இதுதானா? – தயாரிப்பாளர் கமல்ஹாசன் போட்ட கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேயோன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்த படம் 80 நாட்கள் வரை ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதில் 65 நாட்கள் வரை சிவகார்த்திகேயன் பங்கேற்று நடிக்க உள்ளார். காமெடி ஆக்சன் கலந்த ஒரு கதையில் சேயோன் படம் உருவாக உள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தாய்கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த நிலையில் இந்த படத்தையும் அவரே தனது எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தயாரிக்க முன்வந்தார். ஆனால் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை தயாரித்த கமல்ஹாசன், இந்த சேயோன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதனால் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சேயோன் படம் உருவாக உள்ளது.

மேலும் சேயோன் படத்தின் பல முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி ரூபாய்தான். சின்ன பட்ஜெட்டில்தான் இந்த படம் தயாராகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 10 கோடி என்றும் லாபத்தில் பங்கு 70 சதவீதம் என்றும் மீதி 30 சதவீதம் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு என்றும் முடிவாகி உள்ளது.

- Advertisement -

இப்படி லாபத்தில் பங்கு அடிப்படையில் நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தீர்மானிக்க காரணம், இந்த படத்தின் வியாபாரம் ரூ. 120 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் பட்ஜெட் பிரமோ விளம்பர செலவுகள் ரூ. 15 கோடி என மொத்தமாக ரூ. 50 கோடி செலவு ஏற்பட்டாலும் மீதி 70 கோடி நிகர லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தாய்கிழவி படத்தின் வசூல் இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் கடந்த நிலையில் சேயோன் படத்துக்கும் இதே போல இறங்கி பிரமோசன் செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் தாய்கிழவி படத்தின் அபார வெற்றிக்கும் ரசிகர்களின் அதீத கவனத்துக்கும் படத்தை கொண்டு சென்றவர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்