- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த டைரக்டராவது என்னை மாதிரி படம் எடுக்க முடியுமா? - பகிரங்கமாக சவால் விட்ட மிஸஸ்...

எந்த டைரக்டராவது என்னை மாதிரி படம் எடுக்க முடியுமா? – பகிரங்கமாக சவால் விட்ட மிஸஸ் அண்ட் மிஸ்டர் பட இயக்குனர் வனிதா விஜயகுமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். சமீபத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை அவரை கதை திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து உள்ளார்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் கதாநாயகனாக ராபர்ட் மாஸ்டரும், வனிதா விஜயகுமார் நாயகியாகவும் நடித்துள்ளனர். இது அடல்ட் கண்டென்ட் படமாக உள்ளது. படத்தில் பல காட்சிகள் கவர்ச்சியாக ஆபாசமாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். ராபர்ட் மாஸ்டர், வனிதா விஜயகுமாரின் முன்னாள் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலை, இயக்குனர் வனிதா விஜயகுமார் பயன்படுத்தி இருந்தார். இதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்து பேசி அனுமதி வாங்கியதாகவும், இசை உரிமம் பெற்ற சோனி நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்றதாகவும் வனிதா விஜயகுமார் கூறியிருந்தார்.

ஆனால் இளையராஜா, தனது பாடலை பயன்படுத்தியதற்காக வனிதா விஜயகுமார் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த வனிதா, இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ நான் என்று பேசி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பையன் என்கிட்ட லவ் பண்றதா சொன்னான் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் கடந்த 11ம் தேதி வெளியான நிலையில், படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படம் பாருங்கள். அதன்பிறகு என்னை என்ன திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.

என் படத்தில் இருக்கும் எல்லா கண்டெண்டும் என்னுடைய ஒரிஜினல் கன்டென்ட். என் படத்திலிருந்து ஒரு காட்சியை காப்பி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையை விட்டு விலகி விடுகிறேன். நான் எந்த படத்தில் இருந்தும் சுருட்டவில்லை. நீங்கள் படத்தை பார்த்தால்தான் புரியும் என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்