- Advertisement -
Homeபொழுதுபோக்குகலவையான விமர்சனங்களை கடந்து அசத்திய நடிகர் விக்ரம், 10 நாட்களில் வீர தீர சூரன் வசூல்...

கலவையான விமர்சனங்களை கடந்து அசத்திய நடிகர் விக்ரம், 10 நாட்களில் வீர தீர சூரன் வசூல் நிலவரம் – சம்பளத்தை கணிசமாக உயர்த்திய சியான்!

- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வெளியான படம் வீர தீர சூரன். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் டைரக்ட் செய்திருக்கிறார். படத்தில் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தங்கலான். கடந்தாண்டில் வெளியான இந்த படத்தில் விக்ரம் நடிப்பு மிக சிறப்பாக இருந்தும் கதை திரைக்கதையில் இயக்குனர் பா ரஞ்சித் சொதப்பியதால் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் வீர தீர சூரன் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் இந்த படம் 2ம் பாகமாக வெளியாகி உள்ள நிலையில், அடுத்து இந்த படத்தின் 3ம் பாகம் வெளிவருமா அல்லது முதல் பாகம் வெளிவருமா என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகம் நீடிக்கிறது. ஆனால் வீர தீர சூரன் படத்தை பொருத்த வரை நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.

ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விக்ரம் துஷாரா விஜயன் தம்பதியாக காதல் காட்சிகளில் மெல்லிய உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக அசத்தியிருக்கின்றனர். தொடர்ந்து துஷாரா விஜயன் நல்ல நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார்.

- Advertisement -

வீர தீர சூரன் ரிலீஸ் ஆன நாளில் 3.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 10 கோடியாக அதிகரித்தது. அதன்பிறகு 4 நாட்களில் ரூ. 27 கோடியாகவும் வசூல் நிலவரம் உயர்ந்தது. அதன்பிறகு 7 நாட்களில் வசூல் ரூ. 37 கோடியாக இருந்தது. இப்போது உலகம் முழுவதும் 10 நாட்களில் வீர தீர சூரன் படம் வசூல் நிலவரம் ரூ. 59 கோடியாக உயர்ந்துள்ளது.

இதே நிலையில் வீர தீர சூரன் படத்தின் வசூல் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ரூ. 100 கோடி வசூலித்துவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதால் வீர தீர சூரன் படம் பல தியேட்டர்களில் இருந்து அகற்றப்படும் என்பதும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனினும் வீர தீர சூரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் தனது சம்பளத்தை ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 60 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்