- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவனுக்கு நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட பயம், தனது கொள்கையையே மாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு?

விக்னேஷ் சிவனுக்கு நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட பயம், தனது கொள்கையையே மாற்றிய இயக்குனர் வெங்கட் பிரபு?

- Advertisement -

வெங்கட் பிரபு தற்போது “தளபதி 68” திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு நடந்த சம்பவத்தால் தனது கொள்கையையே மாற்றி கட்டுக்கோப்பாக வேலை செய்து வருகிறாராம் வெங்கட் பிரபு.

இது குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் கூறியதாவது, வெங்கட் பிரபுவுக்கும் அவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கும் சினிமா உலகில் பார்ட்டி பிரதர்ஸ் என்ற செல்லப்பெயர் உண்டு. அடிக்கடி இருவரும் பார்ட்டி கொண்டாடுவார்களாம். ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர்கள் பார்ட்டி நடத்தவே இல்லையாம்.

- Advertisement -

“தளபதி 68” படத்தின் டிஸ்கஷனில் என்றைக்கு உட்கார்ந்தார்களோ, அன்றிலிருந்து எந்த பார்ட்டிக்கும் போக கூடாது என்று முடிவு எடுத்துவிட்டாராம் வெங்கட் பிரபு. முழுக்க முழுக்க “தளபதி 68” திரைப்படம் குறித்த டிஸ்கஷனிலேயே இருக்கிறாராம்.

மேலும் கதை இன்னும் ஒரு வடிவத்திற்குள் வரவில்லையாம். ஆதலால் மிக மும்முரமாக பணியாற்றி வருகிறாராம் வெங்கட் பிரபு. ஒரு வேளை இதில் எதாவது சிக்கல் ஏற்பட்டால், வெளியில் இருந்து ஒரு கதையை வாங்கி படமாக்க முடிவு செய்திருக்கிறாராம். விஜய்யை வைத்து இயக்கும் இந்த அரிய வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்ற முடிவில் வெங்கட் பிரபு இருக்கிறாராம். இந்த பயத்திற்கு காரணமே விக்னேஷ் சிவன்தான் என கூறியிருக்கிறார் அந்தணன்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்ததையும் ஆனால் அந்த வாய்ப்பு அவரது கையை விட்டுப் போய்விட்டதையும் நாம் அறிந்திருப்போம். அவருக்கு நடந்தது நமக்கும் நடந்துவிட கூடாது என்பதால்தான் இவ்வளவு தீவிரமாக வெங்கட் பிரபு டிஸ்கஷன் செய்து வருகிறாராம்.

- Advertisement -

சற்று முன்