- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரசாந்த் சார்-ரால் விஜய்க்கு அடிக்கடி இந்த சம்பவம் நடந்துச்சு... படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக பகிரும்...

பிரசாந்த் சார்-ரால் விஜய்க்கு அடிக்கடி இந்த சம்பவம் நடந்துச்சு… படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக பகிரும் இயக்குனர் வெங்கட் பிரபு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விஜய்யின் கோட் தான். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகளில் இயக்குனரான வெங்கட் பிரபு ஈடுபட்டிருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார்.

 

- Advertisement -

தந்தை மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடிக்க, பல முக்கிய நடிகர்களும் இதில் இணைந்து இருக்கிறார்கள். குறிப்பாக பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டோர் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். டைம் ட்ராவல் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

 

- Advertisement -

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து துருக்கி ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. சிஜி பணிகளும் நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டபடி கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் தொடங்கியதில் இருந்து இது தொடர்பான அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

 

ஆனால் இது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் இதன் பாடல்கள் பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. விசில் போடு பாடலை அந்த அளவுக்கு எடுபடாத நிலையில் கடைசியாக வெளிவந்த ஸ்பார்க் பாடல் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.

 

குறிப்பாக அதில் இடம்பெற்றிருக்கும் இளம் வயது விஜயின் லுக்கை கண்டு நொந்து போய் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காகவா வெங்கட் பிரபு வெளிநாடு சென்றார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க விஜய் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கோட் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் அனைவருக்குமே திருப்தி ஏற்பட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

இதனிடையே படம் குறித்த சில தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்து இருக்கிறார். அதில், படப்பிடிப்பு தளத்தில் பிரசாந்த் எப்போதுமே கலகலப்பாக இருப்பார். இதன் காரணமாக, எங்களுக்கு ஏகப்பட்ட ப்ளூப்பர் காட்சிகள் கிடைத்தன. விசில் போடு பாடலுக்கு பிரபுதேவா விஜய் மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் போட்டி போட்டு நடனமாடி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்