லியோ படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் படு பிஸியாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடித்து வருகிறது. விஜய் 68 என்ற இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு, புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் டைட்டிலை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கும் அவருக்கு ஒரு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும், மற்றொரு ஜோடியாக சிநேகாவும் நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, லைலா, விடிவி கணேஷ், மைக் மோகன், ஜெயராம் என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.
விஜய் படங்களை பொருத்த வரை, வசூலில் எப்போதுமே அனல் பறக்கும். நூற்றுக்கணக்கில் கோடிகளை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இப்போது அதிக சம்பளம் வாங்கும், மிகப்பெரிய நடிகராக அவராக மட்டுமே இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என்று தெரிய வந்துள்ளது.
சென்னை, தாய்லாந்து மீண்டும் சென்னை, மீண்டும் துபாய் என படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது விஜய் 68 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து இலங்கையிலும், தொடர்ந்து டர்க்கியிலும் ஷூட்டிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விஜய் 68 படத்தில், விஜய் பங்கேற்கும் 10 நிமிட பிளாஷ்பேக் காட்சி வருகிறது. இதில் விஜய் இளமையாக நாயகனாக வருகிறார். இதற்காக மட்டும் புல் பாடி செக்கப், டெக்னிக் தொழில் நுட்ப விஷயங்களுக்காக ரூ. 6 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 10 நிமிட காட்சிக்கு இவ்வளவு கோடி ரூபாய்களை செலவழிப்பது பலரையும் புருவத்தை தூக்க வைத்துள்ளது.
படத்தின் கதைக்காக, தேவைக்காக அதன் காட்சியமைப்புக்காக பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்வதில் தவறில்லை. படத்தில் 10 நிமிடமே இடம்பெறும் ஒரு காட்சிக்காக ஆறு கோடி ரூபாயை செலவு செய்வது என்பது சற்று மிகையான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஹீரோ விஜய், இதுகுறித்து வெங்கட்பிரபுவுக்கு அறிவுறுத்தி இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.





