தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் அஜீத்குமார். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தான் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களாக உள்ளனர். இவர்களது படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படங்களாக இருக்கின்றன.
கடந்த 2023ம் ஆண்டில் எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் அஜீத்குமார் நடிப்பில் படம் எதுவும் வெளியாகவில்லை. விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்தும் அந்த படங்கள் திரைக்கு வரவில்லை.
இதில் மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட்பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என இயக்குனரே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். அந்த படம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சரியாக எடுக்கப்பட்டு, திரைக்கு வருகிறது.
ஆனால் 15 மாதங்களுக்கு மேலாக ஷூட்டிங் நடத்த விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, பின்பு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இன்னும் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏகே ரசிகர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் இன்று விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியிடுவதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியிட்டு பொங்கல் ரிலீஸ் என அறிவித்தனர். இப்போது டிரெய்லரில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் வாரிசு படத்துக்கு பின் விஜய் நடித்த லியோ தி கோட் என 2 படங்கள் ரிலீஸாகி விட்டது. தளபதி 69 படமும் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிய உள்ளது. இதில் யானைப் பசிக்கு சோளப்பொரி போல, கடந்த 2 ஆண்டுகளாக அஜீத் படமே வரவில்லை. பொங்கலுக்கு விடாமுயற்சி படம் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு டிரெய்லர் வெளியீடு என்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.





