- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு வில்லங்கமான அக்ரிமென்டா, லலித்குமாரிடம் வசமாக சிக்கிக்கொண்ட விக்னேஷ் சிவன் - என்ன கொடுமை...

இப்படி ஒரு வில்லங்கமான அக்ரிமென்டா, லலித்குமாரிடம் வசமாக சிக்கிக்கொண்ட விக்னேஷ் சிவன் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரை வைத்து கடந்தாண்டில் படம் இயக்க வேண்டியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். கடைசி நேரத்தில் கதை பிடிக்கவில்லை என அவரை கழட்டி விட்டார் அஜீத்குமார். தன் கணவருக்கு உங்கள் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுங்கள் என நயன்தாரா சிலமுறை போனில் பேசியும் அஜீத் குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், இனி அஜீத் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா.

கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ப்புகளே இல்லாமல் பயங்கர மன உளைச்சலில் இருந்துவரும் விக்னேஷ் சிவனுக்கு, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இயக்கும் வாய்ப்பு வந்தது. முதலில் அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் மிக அதிகம் என்பதால், ராஜ்கமல் நிறுவனம் விலகிக்கொண்டது.

- Advertisement -

இதையடுத்து, அந்த படத்தை இயக்க லியோ படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் முன்வந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தரப்பில் இந்த படத்தை தயாரிக்க முடிவானது. இதில் விக்னேஷ் சிவன் சம்பளம் ரூ. 10 கோடி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் சம்பளம் ரூ. 15 கோடி என முடிவானது. மேலும், ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அக்கா கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் துவக்கமே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தின் தலைப்பு எல்ஐசி என வைக்கப்பட்டுள்ளது. இதே எல்ஐசி என்ற தலைப்பை தயாரிப்பாளர் தமிழ்குமரன் ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பை எனக்கு ஓசியில் கொடுங்கள் என விக்னேஷ்சிவன் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த டைட்டில் பிரச்னை வரை கோர்ட் வரை செல்லும் அளவுக்கு போயுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் படத்துக்கான தயாரிப்பில் ஒரு புது அக்ரிமெண்ட் போட்டுள்ளார். அந்த ஒப்பந்தப்படி படத்தின் பட்ஜெட் மொத்தம் 65 கோடி ரூபாய். அதற்கு பிறகும் தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் பட்சத்தில், மேலும் ரூ. 5 கோடி தரப்படும். மொத்தம் ரூ.70 கோடி பட்ஜெட்தான் இறுதியான முடிவு. அதற்கு மேல் எவ்வளவு செலவானாலும் அதை இயக்குநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த வில்லங்கமான ஒப்பந்தம்.

இதுபோன்ற ஒப்பந்தம் போடப்பட்டால் கடைசியில் அது இயக்குநருக்குதான் வம்பாக அமையும். ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் இதுபோன்ற அக்ரிமென்டால் நயன்தாரா சம்பளத்தில் கைவைக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதால், தன் கணவருக்காக தன் சம்பளத்தில் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் நயன்தாரா கொடுத்து உதவுவார் என பலரும் கலாய்த்து வருகின்றனர்,

- Advertisement -

சற்று முன்