- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் அதிரடி ஆட்டம், ஆரம்பமே அசத்தலா இருக்குதே? - இந்த...

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் அதிரடி ஆட்டம், ஆரம்பமே அசத்தலா இருக்குதே? – இந்த பிளான் எந்த அரசியல் கட்சியும் யோசிக்கலையே…

- Advertisement -

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி பெயரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அவர், மாநிலம், மாவட்டம், மாநகரம், ஒன்றியம் என பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

ஏற்கனவே, விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய வகையில், பல்வேறு துணை அமைப்புகளையும் அதில் உருவாக்கி இருப்பதால் அரசியல் கட்சியாக அதை உருவாக்குவதில் பெரிய சிரமங்கள் எதுவும் இல்லை. அந்தந்த நிர்வாகிகளை அப்படியே, கட்சி பொறுப்புகளுக்கு மாற்றி விட்டார். அதனால் நீண்டகாலமாக விஜய்க்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளது.

- Advertisement -

கட்சி துவங்கியவுடன் முதல் அறிவிப்பிலேயே 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் என்னுடைய இலக்கு. தமிழக முதல்வர் இருக்கைதான் என் லட்சியம் என்று ஆளுங்கட்சி திமுகவுக்கும், எதிர்கட்சி அதிமுகவுக்கும் சவால் விடும் வகையில், தனது அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டார் விஜய். இது அதிமுகவினரை விட, ஆளுங்கட்சியான திமுகவை அதிகம் சீண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது அரசியல் பயண இலக்குகளை மிக உன்னிப்பாக கவனித்து ஒவ்வொரு அடியையும் விஜய் எடுத்து வைத்து வருகிறார். அதன் துவக்கமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வகையில், தொகுதி வாரியாக பாராட்டு விழா நடத்தி பரிசு தொகையை அள்ளி வழங்கினார். இந்த ஆண்டும் விஜய் அந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

- Advertisement -

இதையடுத்து மற்றொரு தரமான சம்பவத்தை விஜய் செய்திருக்கிறார். அதாவது கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தமிழன் என்ற படத்தில், விஜய் வக்கீலாக இருப்பார். அப்போது மக்களுக்கு தமிழ், கணக்கு, அறிவியல், வரலாறு தெரிவது போல, அடிப்படை சட்டமும் தெரிந்திருக்க வேண்டும். சட்டங்களின் அடிப்படையில் தங்களது உரிமைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என கூறியிருப்பார்.

இப்போது அரசியல் கட்சி தலைவராக அதை முன்னெடுத்து செயல்படுத்த உளளார். அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மொத்த போலீஸ் ஸ்டேஷன்களை கணக்கெடுத்து, ஒரு ஸ்டேஷனுக்கு தனது கட்சி சார்ந்த 2 வக்கீல்களை விஜய் நியமிக்க உள்ளார். அவர்கள், ஸ்டேஷனுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு, சட்ட உதவிகளை இலவசமாக செய்து, அவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். இது வேற லெவலா இருக்குதே என மற்ற அரசியல் கட்சியினர் வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்