- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூர் துயர சம்பவம்… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு ரூ. 2...

கரூர் துயர சம்பவம்… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

- Advertisement -

கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சம் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில் கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து இதயமும் மனதும் மிக மிக கனத்துப் போயிருக்கும் சூழல்.

- Advertisement -

நாம் உறவுகளை இழந்து தவிக்கும் பெரும் துயர்மிகு மனநிலையில் என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கி தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்து நழுவ செய்கிறது.

என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு சொல்லொணா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிற அதே வேளையில் இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்து கொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நாம் உறவுகளின் இழப்பை தாங்கவே இயலாது தான்.

- Advertisement -

இருந்தும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உறவினை இழந்து தவிக்கும் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்சம் ரூபாயும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும் இந்த நேரத்தில் என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம் பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அருளால் அனைத்திலிருந்தும் நாம் மீண்டுவர முயற்சிப்போம் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்