- Advertisement -
Homeபொழுதுபோக்குபோய் வா மகளே... அடக்கம் செய்யப்பட்டது மீரா உடல்... நொறுங்கி நின்ற விஜய் ஆண்டனி... கலங்க...

போய் வா மகளே… அடக்கம் செய்யப்பட்டது மீரா உடல்… நொறுங்கி நின்ற விஜய் ஆண்டனி… கலங்க வைக்கும் கடைசி தருணம்

- Advertisement -

விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். அவரது பாடல்களுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி நான் படம் மூலம் நடிகராகவும் களமிறங்கிய விஜய் ஆண்டனி அளவான நடிப்பையும் வெளிப்படுத்தக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக கொலை படமும், இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படமும் வெளியாகின.

அவரது இரண்டு மகள்களில் ஒரு மகள் மீரா. சென்னை சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்தவந்தார். படிப்பு, கலை என பல துறைகளில் ஆக்டிவ்வாக இருந்த மீரா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

- Advertisement -

நேற்று மாலை இறுதிச்சடங்கு நடப்பதாக இருந்தது. ஆனால் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தி இடம் கிடைப்பதற்கான அனுமதி லேட்டாக வந்ததால் இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி விஜய் ஆண்டனி வீட்டிலிருந்து மீராவின் உடல் வாகனத்தில் வைத்து நேராக தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது.

அதனையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தேவாலயத்தில் வைத்து மீராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக உடல் இறக்கப்பட்டது. அப்போது கொஞ்சம் தடுமாற விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கலங்கியபடி பார்த்து பார்த்து என்று துடித்தார்.

- Advertisement -

இறுதிச்சடங்கு செய்யப்படும்போதும், மீராவின் உடல் அடக்கம் செய்யப்படும்போதும் விஜய் ஆண்டனி நிலைகுலைந்து நின்றிருந்தார். எப்போதும் யாரையும் புண்படுத்தாமல் நடந்துகொள்ளும் விஜய் ஆண்டனிக்கா இந்த நிலைமை என்று அங்கு குழுமியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மேலும் அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை இருந்தாலும் அவர் மனதை தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்