நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். வேட்டைக்காரன் மதகஜ ராஜா காதலில் விழுந்தேன் சுக்ரன் டிஸ்யூம் நான் அவனில்லை நினைத்தாலே இனிக்கும் வெடி வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாகவும் இருந்தன.
இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமான படம் நான். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சலீம் அண்ணாதுரை இந்தியா பாகிஸ்தான் கொலைகாரன் சைத்தான் எமன் காளி பிச்சைக்காரன் கோடியில் ஒருவன் கொலை திமிரு புடிச்சவன் ரோமியோ பிச்சைக்காரன் 2 என பல படங்களில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்.
இதில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் பிச்சைக்காரன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெரிய கோடீஸ்வரன், தனது அம்மாவின் உயிரை காப்பாற்ற வேண்டி 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படுகிறது. தாய்ப்பாசத்துக்காக அதை நாயகன் செய்து, கடைசியில் ஜெயிக்கிறாரா என்பதுதான் கதை.
இதே பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விஜய் ஆண்டனி நடித்த படங்களில் பெரிய வரவேற்பை பெற்ற படங்கள் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் ஆகிய 2 படங்களும்தான் பெரிய ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மற்ற படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் சராசரியான படங்களாக மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்பட்டன. இதற்கிடையே படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது படங்களுக்கு மட்டுமே இனி இசையமைக்காமல் மற்ற இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைக்கவும் விஜய் ஆண்டனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.





