- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி... பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்... முதல்முறையாக அரசின் மீதும்...

கண்ணீரில் மிதக்கும் கள்ளக்குறிச்சி… பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்… முதல்முறையாக அரசின் மீதும் நேரடி பாய்ச்சல்…

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மரண ஓலமே கேட்கிறது. எங்கு பார்த்தாலும் வீதிகள் தோறும் மக்கள் அழுவதை காண முடிகிறது. தங்கள் குடும்பத்தினரை சாராயத்திற்கு காவு கொடுத்து விட்டு ஒவ்வொருவரும் கண்ணீர் துயரில் மீறாமல் இருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தந்தையை இழந்து அவர்களது பிள்ளைகள் தவிர்த்து வருகின்றனர்.

 

- Advertisement -

இப்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனை மட்டும் இன்றி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

- Advertisement -

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதே போல் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களும் சென்றனர்.

 

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளவில்லை என திமுக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

 

கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரைக்கும் அந்த காட்சி மாறவில்லை. இந்த நிலையில் அரசுக்கு எதிராக, தமிழக வெற்றி கழகத் தலைவரும், நடிகருமான விஜய் குரல் கொடுத்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டி இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்ற விஜய் அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெண் ஒருவர் கதறி அழுத அவர் காலில் விழுந்தார். அவரிடம் ஆறுதல் கூறிய விஜய், தனது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளிடம் களத்தில் இறங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் சமூக வலைதளத்தில் மட்டுமே பதிவு செய்து வந்த விஜய், தற்போது முதல் முறையாக களத்திற்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்