- Advertisement -
Homeபொழுதுபோக்குமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கிய தவெக கட்சித் தலைவர்...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கிய தவெக கட்சித் தலைவர் விஜய் – இதுலேயும் பஞ்சாயத்து கௌப்பிட்டாங்களே?

- Advertisement -

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் ஊரே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை நடிகர் விஜய் வழங்கி இருக்கிறார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து இந்த நிவாரண பொருட்களை தன் கையால் விஜய் வழங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான பிறகு லைட் கலர் பேண்ட், வெள்ளை நிற முழுக்கை சட்டை என்ற கெட்டப்பில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஜய், இந்த முறை கோடு போட்ட அரைக்கை சட்டை, பேண்ட் அணிந்த நிலையில் மிக எளிதாக இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரே பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு பிரமாண்டமாக, வெற்றிக்கரமாக நடந்த நிலையில் அதற்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகள், நிகழ்ச்சியை சிறப்பாக செய்த ஏற்பாட்டாளர்கள், விழுப்புரம் மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தனது பனையூர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, கடந்த வாரத்தில் சைவ விருந்து வழங்கி உபசரித்து தனது நன்றியை நடிகர் விஜய் தெரிவித்தார்.

- Advertisement -

இப்படி கட்சியின் முக்கிய செயல்பாடுகளை, கட்சி சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகளை அந்தந்த பகுதிகளுக்கே நேரில் சென்று விஜய் வழங்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு, தனது பனையூர் கட்சி அலுவலகத்துக்கு விவசாயிகளை வரவழைத்து சைவ உணவு விருந்தளிப்பது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது என்பது தவறு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மக்களுக்கு உதவி செய்யவும், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லவும் அவர்கள் இருப்பிடம் தேடிச் செல்வதே ஒரு தலைவனுக்கு பெருமை சேர்க்கும். அப்போதுதான் அவர் மீதான மதிப்பும், மரியாதையும் பலமடங்கு அதிகரிக்கும். அவர்களை தனது இடத்துக்கு வரவழைத்து உதவி செய்வதும், மரியாதை செய்வதும் பலருக்கும் அதிருப்தியளிப்பதாகவே இருக்கும். இது குறித்து விஜய் சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்