தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்றால் அது ஜெயிலர் படம் தான். பீஸ்ட் படம் கொடுத்த சறுக்கலுக்குப் பின், ரஜினிகாந்துடன், நெல்சன் கூட்டணி சேர்ந்த படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடிக்கிறார். மேலும், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் 10ஆம் தேதி உலக முழுவதிலும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படம் உருவாக விஜய்தான் முக்கிய பங்கு ஆற்றியதாக பிரபல திரைப்பட பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ஜெயிலர் படத்தில் இசை வெளியீட்டு விழா மேடையில் கலாநிதி மாறன் இதுவரை இல்லாத அளவிற்கு காட்டமாக பேசியதாகவும், ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க முயற்சிப்பவர்களுக்கு நாசுக்காக பதிலடி கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், ரஜினிக்கு அடுத்தடுத்து படங்கள் இருப்பதாக கூறிய செய்யாறு பாலு, நெல்சன் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணியின் போது விஜய்யின் பீஸ்ட் பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அச்சமயத்தில் நெல்சனுக்கு ஊக்கமளித்ததே விஜய்தான். விஜய்யிடம் நெல்சன் இந்த கதையை சொன்னபோது, அவருக்கு நம்பிக்கை கொடுத்து, ரஜினி இந்த கதையை நிச்சயம் தேர்வு செய்வார் என்றும் பாசிட்டிவாக வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் ரஜினியும் கதைக்கு ஓகே சொன்ன பின், ‘பீஸ்ட்’ படம் சரியாக போகாததால், ஜெயிலர் படம் நின்றுவிடும் சூழல் வந்தது. இருப்பினும் அப்போதும் ரஜினி உறுதியாக இருந்து படத்திற்கு ஓகே சொன்னார் என்ற தகவலை நெல்சன் மேடையில் கூறினார்.
விஜய்யிடம் ஒரு நல்ல பழக்கம் இருப்பதாக குறிப்பிட்ட செய்யாறு பால, விஜய் எப்போதும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் பதற்றத்தை போக்க ஆரம்பத்தில் சகஜமாக அவர்கள் பற்றியும், குடும்பம் பற்றியும் பேசுவார். மேலும் அவர்களுக்கு விஜய்யே காஃபி உள்ளிட்டவற்றை போட்டு கொடுத்து அவர்களுடன் நெருக்கம் ஆன பின்பே கதையை கேட்பார். இதுபோல நெல்சனுக்கும் நம்பிக்கை கொடுத்தே ரஜினியிடம் அனுப்பியிருப்பார். இந்த விஷயத்தை நெல்சன் அழகாக மேடையில் பதிவு செய்ததாகவும் கூறினார் செய்யாறு பாலு.





