- Advertisement -
Homeபொழுதுபோக்குசெப்டம்பர் மாத இறுதியில் மாநாடு... அரசியல் களத்தில் ஆக்ஷன் காட்டும் விஜய்... திடீர் கோயில் தரிசனம்......

செப்டம்பர் மாத இறுதியில் மாநாடு… அரசியல் களத்தில் ஆக்ஷன் காட்டும் விஜய்… திடீர் கோயில் தரிசனம்… எங்கு சென்றார் தெரியுமா…

- Advertisement -

தளபதி மக்கள் இயக்கத்தை நடத்தி வந்த விஜய், அண்மையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்த அவர், தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்று விஜய் கூறியிருக்கிறார்.

 

அதற்கு முன்னதாக தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் விஜய் நடித்து வருகிறார். தற்போது அவர் கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் வேகம் எடுத்து இருக்கின்றன.

 

படத்தில் இருந்து நான்காவது பாடல் நாளை வெளியாகிறது. இந்த பாடலுக்கு த்ரிஷா நடனமாடி இருப்பது உறுதியாக இருக்கிறது. படம் குறித்து பேசிய வெங்கட் பிரபு, ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு ஏராளமான திருப்பங்கள் படத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது சில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

 

இது ஒரு பக்கம் இருக்க தனது அரசியல் கட்சிக்கான வேலைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். வினோத்துடன் ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு அவர் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே, பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார் நடிகர் விஜய். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு ஆச்சரியமூட்டிய விஜய், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த இருக்கிறார் விஜய்.

 

வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாநாட்டிற்கு அனுமதி கூறி மனு அளித்தார். இப்படியான சூழலில், நடிகர் விஜய் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று இருக்கிறார். தனது கோட் திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்வதாலும் அவர் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்