- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பாராத நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சட்டென என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி - திகைத்துப்...

எதிர்பாராத நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சட்டென என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி – திகைத்துப் போன பிக்பாஸ் கண்டெஸ்டன்ட்ஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆன நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக வாரம்தோறும் சனி ஞாயிறு தினங்களில் விஜய் சேதுபதி தோன்றி பேசி வருகிறார்.

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 துவங்கியது. அப்போது சீசன் 9க்காக புதிதாக அமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகர் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார். அங்குள்ள பகுதிகளை எல்லாம் சுற்றி காட்டி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போகவில்லை. இப்போது 90 நாட்கள் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் விஜய் சேதுபதி திடீரென என்ட்ரி கொடுத்து அங்கிருந்த போட்டியாளர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தார். இந்த வாரத்தில் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக புள்ளிகளை பெற்று போட்டியாளர் அரோரா வெற்றி பெற்று, பைனலுக்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார்.

- Advertisement -

அதற்கான வெற்றி டிக்கெட்டை வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் திடீரென வந்தார். கார்டன் ஏரியாவில் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு பின்புறம் இருந்த கதவை திறந்துக்கொண்டு திடீரென வந்த விஜய் சேதுபதியை பார்த்து பிக்பாஸ் போட்டியாளர்கள் முதலில் ஷாக் ஆகிவிட்டனர்.
அப்போது அரோராவை மேடைக்கு அழைத்து டிக்கெட் டூ பினோலே டிக்கெட்டை அவரிடம் கொடுத்த விஜய் சேதுபதி பிறகு வீட்டுக்குள் வந்தார்.

அங்கு இருந்த கிச்சன் பகுதியில் மேடையில் அமர்ந்தபடி விக்கல்ஸ் விக்ரம் அரோரா சாண்ட்ரா கானா வினோத் சபரி மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோரிடம் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு தந்த சாக்லேட்டை சாப்பிட்ட பிறகு 6 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு விஜய் சேதுபதி அங்கிருந்து வெளியே வந்து பிறகு வந்த வழியாகவே வெளியேறிச் சென்றார்.

- Advertisement -

சற்று முன்