- Advertisement -
Homeபொழுதுபோக்குசெம காண்டில் இருக்கும் விஜய்? ஏமாந்துப்போன ரசிகர்கள், அப்போ பிறந்தநாளுக்கு அவ்வளவுதானா?

செம காண்டில் இருக்கும் விஜய்? ஏமாந்துப்போன ரசிகர்கள், அப்போ பிறந்தநாளுக்கு அவ்வளவுதானா?

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதையும் அத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதையும் ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் “லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோஸில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது 2000 டான்சர்கள் நடனமாடும் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையவுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் வருகிற 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

எப்போதும் விஜய்யின் பிறந்தநாளுக்கு விஜய் படங்களை குறித்த அப்டேட் வெளிவருவது வழக்கம். அதே போல் இந்த பிறந்தநாளுக்கும் “லியோ” அல்லது “தளபதி 68” திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி வருகிற விஜய் பிறந்தநாள் அன்று “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என்றும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் என்றும் தகவல் வந்தது. ஆனால் இத்தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று பின்னால் தெரிய வந்தது. எனினும் “தளபதி 68” திரைப்படம் குறித்த அப்டேட்டாவது வருமா என்று ரசிகர்கள் ஏங்கிக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தை குறித்த பேச்சுக்கள் தொடங்கியதில் இருந்து “லியோ” திரைப்படம் குறித்த பேச்சுக்கள் குறைந்துள்ளதால் விஜய் செம கடுப்பில் இருக்கிறாராம். இதனால் “தளபதி 68” குறித்த அப்டேட் வெளிவர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும் வருகிற விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளிவரவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்