- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மனைவி பிள்ளைகள் பெற்றோரை தனக்கு கடனாளிகளாக மாற்றிய தவெக தலைவர் விஜய் - வேட்பு...

தனது மனைவி பிள்ளைகள் பெற்றோரை தனக்கு கடனாளிகளாக மாற்றிய தவெக தலைவர் விஜய் – வேட்பு மனுதாக்கலில் அவர் சொன்ன தகவல்களால் அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து கணக்குகளை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதுசார்ந்த முழு விவரங்களை அளிக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் முக்கிய விதிமுறையாகும். அசையும் சொத்துகள் அசையா சொத்துகள் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் இதில் தெரிவிக்கலாம்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கலை நேற்று செய்தார். அப்போது தனது ஆண்டு வருமானம் மற்றும் வரி செலுத்திய விவரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

- Advertisement -

அதில் தனது மனைவி மகன் மகள் மற்றும் தனது தாய் தந்தைக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து இருப்பதாகவும் விஜய் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். வேட்பு மனுவில் இதுகுறித்து விஜய் கூறியிருப்பதாவது, தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு 3.02 கோடி ரூபாய், தனது அம்மா ஷோபாவுக்கு 8.7 கோடி ரூபாய் கடன் தந்திருப்பதாக அதில் விஜய் கூறியிருக்கிறார்.

அடுத்து தனது மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8.78 லட்சம் ரூபாய், மகள் திவ்யா சாஷாவுக்கு 4.6 லட்சம் ரூபாய் என கடன்கள் தந்திருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாய், தனது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்துக்கு 3 கோடி ரூபாய் கடன்கள் கொடுத்திருப்பதாகவும் நடிகர் விஜய் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தனது மனைவி சங்கீதாவிடம் 4.07 கோடி ரூபாய் மதிப்பிலான 3,132 கிராம் தங்கமும், 1 கோடி ரூபாய் மதிப்பில் 134.91 கேரட் வைரமும் உள்ளது. சங்கீதாவின் பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் மனுவில் விஜய் கூறியிருக்கிறார். நடிகர் விஜயின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு 404 கோடி ரூபாய் என்றும் அசையா சொத்துக்கள் 115 கோடி ரூபாய் என்றும் பிரமாண பத்திரத்தில் விஜய் கூறியிருக்கிறார்.

தனது பெற்றோர் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு கோடிக்கணக்கில் கடன் தந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் வேட்பு மனுதாக்கலில் கூறியிருப்பது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜயின் சொத்துகளுக்கு முழு வாரிசுதாரர்கள் அவரது மனைவி பிள்ளைகள்தான். அப்படி இருக்கும் போது தனது சம்பாதியத்தில் வந்த வருமானத்தை அவர்களுக்கு கடனாக தந்திருப்பதாக விஜய் கணக்கு காட்டியிருப்பது அவரது ரசிகர்களையே குழப்பமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்