- Advertisement -
Homeபொழுதுபோக்குயார்ரா அந்த பையன்? மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர் தூக்கி வீசிய அந்த இளைஞர் -...

யார்ரா அந்த பையன்? மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர் தூக்கி வீசிய அந்த இளைஞர் – 2 பேர் வெளியிட்ட போட்டி வீடியோக்களால் இணையத்தில் சர்ச்சை!

- Advertisement -

மதுரையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் நடந்து வந்த நடிகர் விஜய், திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினரை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அப்போது சிலர், விஜயை பார்த்த ஆர்வத்தில் உற்சாகத்தில் ரேம்ப் வாக் மீதேறி நடிகர் விஜயை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தனர். அவரை நேரில் கட்டிப்பிடிக்கவும் கைகுலுக்கவும் முயற்சித்தனர். அப்போது விஜய்க்கு அருகில் நடந்த வந்த பவுன்சர்கள், அவர்கள் விஜயை நெருங்க விடாமல் தடுத்து அப்புறப்படுத்தினர். அப்போது ஒரு இளைஞரை தடுத்த பவுன்சர் அவரை தூக்கி அப்படியே வீசினார்.

- Advertisement -

உடனே சுதாரித்துக்கொண்ட அந்த இளைஞர், அங்கிருந்த தடுப்பு கம்பியை பிடித்து தொங்கி பின் கீழே இறங்கி விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஒரு பெண்மணி பேசும் வீடியோ வெளியானது. அதில் பேசிய பெண்மணி, பவுன்சர் அப்படி தூக்கி வீசியது என் மகன்தான். ஏதாவது ஆகியிருந்தால் என் நிலமை என்னாவது என்று அந்த சம்பவத்தை கண்டித்து பேசியிருந்தார்.

அதன்பிறகு அந்த பெண்மணி பேசிய வீடியோவை பகிர்ந்த அந்த வாலிபர், என்னுடைய பெயர் அஜய். தவெக மாநாட்டில் பவுன்சர் தூக்கி வீசியது என்னை தான். ஆனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. என் அம்மா என்று வீடியோவில் பேசியிருப்பது என் அம்மாவே இல்லை. இது போலியான வீடியோ. அதில் எந்த உண்மையும் இல்லை. என் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை எனது இன்ஸ்டாகிராமில் பாருங்கள் என்று கூறி விளக்கம் தந்திருந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் வேறொரு இளைஞர் தன்னுடைய பெயர் சரத்குமார் என்றும் ரேம்ப் வாக்கில் நடந்த போது பவுன்சர்கள் தூக்கி வீசியது என்னை தான். அப்போது நெஞ்சில் எனக்கு அடிபட்டுவிட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன் என்று ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது ஒருபுறம் வைரலாகி வருகிறது.

இதையடுத்து தனது அம்மா இல்லை என்று பதிவு வெளியிட்ட வாலிபர் அஜய், உண்மையில் பவுன்சர் தூக்கி வீசியது என்னைதான். அப்போது நான் அணிந்திருக்கும் சட்டை துண்டு எல்லாம் கவனியுங்கள். அது நான்தான். அந்த மாநாட்டில் நான் எடுத்த செல்பி வீடியோவையும் பார்த்தால் அது உங்களுக்கே தெளிவாக தெரிந்து விடும் என்று ஒரு பதிவை செய்திருக்கிறார். இந்த 2 பேரில் உண்மையில் பவுன்சர் தூக்கி வீசியது யாரை. இதற்கிடையே தனது மகன் என்று பேசிய அந்த பெண்மணி யார் என்று இணையத்தில் பெரிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. யார்ரா அந்த பையன் என பலரும் கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்