- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து இரண்டு பெரிய பட வாய்ப்புகள் நழுவிப் போனதா... என்ன ஆச்சு நம்ம சீயான்...

அடுத்தடுத்து இரண்டு பெரிய பட வாய்ப்புகள் நழுவிப் போனதா… என்ன ஆச்சு நம்ம சீயான் விக்ரமுக்கு…

- Advertisement -

விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது தங்கலான் திரைப்படம். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். தொய்வான திரைக்கதை மற்றும் வசனங்கள் புரியாததால் தங்கலான் திரைப்படம் எடுபடாமல் போனது. இருப்பினும் அந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் அடுத்ததாக, விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சித்தா திரைப்படத்தை தொடர்ந்து அருண்குமார் இதனை இயக்கியிருந்தார். ஒரே இரவில் நடைபெறும் கதை போல இதனை எடுத்திருந்தார்கள். ஆக்சன் நிறைந்த காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

விக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தையும் கச்சிதமாக செய்திருந்தார். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டையும் விறுவிறுப்பாக கொடுத்திருந்தார் அருண்குமார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இப்படியான சூழலில் விக்ரமின் அடுத்த திரைப்படம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

முதலில், மடோன் அஸ்வின் உடன் விக்ரம் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அந்த இயக்குனர் மண்டேலா மாவீரன் என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தார். இதன் காரணமாக இந்த கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தத் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்லவே இல்லை. அதற்கான காரணமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

- Advertisement -

இது இப்படி இருக்க, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய திரைப்படங்களை எடுத்த பிரேம்குமார் உடன் விக்ரம் கைகோர்ப்பதாக அறிவிக்கப்பட்டது. ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் பிரேம்குமார் கூறிய மையக்கதை விக்ரமுக்கு பிடித்திருந்தாலும், ஒட்டுமொத்த திரைக்கதையும் கேட்கும் போது அவர் திருப்தி அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் பிரிந்ததாக சொல்கிறார்கள்.

இப்படி இருக்க விக்ரம் அடுத்ததாக, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணாவுடன் கைகோர்த்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணா சிம்புவுடன் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவேளையில்தான் ராம்குமார் பாலகிருஷ்ணா, விக்ரமிடம் ஒரு கதையை கூறியதாகவும் தற்போது அது அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்