- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு விஷயத்தை நயன்தாரா பண்ணலாமா? இதற்கு ஐடியா கொடுத்தது அவரது கணவர் விக்னேஷ் சிவனாம்...

இப்படி ஒரு விஷயத்தை நயன்தாரா பண்ணலாமா? இதற்கு ஐடியா கொடுத்தது அவரது கணவர் விக்னேஷ் சிவனாம் – டைரக்டர் மைண்ட் இப்படி கூட யோசிக்குமா?

- Advertisement -

மிக்ஜம் புயலால் சென்னை மாநகர பகுதிகள் பலவும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன, வீடுகளை சுற்றிலும் குளம் போல மழைவெள்ளம் தேங்கியிருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

மழைவெள்ளம் பாதித்த இடங்கள் மிக அதிகம் என்பதால், பல இடங்களில் மீட்பு பணிகளோ, தேவையான உதவிகளோ செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதுவும் தொடர்புக்கு மொபைல் போன், இன்டர்நெட் என எதுவுமே பயன்படுத்த முடியாத சூழலில் மக்கள், மற்றவர்களை தொடர்பு கொள்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.

- Advertisement -

சென்னையை பொருத்த வரை கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்களும், பெரிய நடிகர்களும், இயக்குநர்களும் உள்ளனர். அண்டர்கிரவுண்ட் பகுதிகளில் அவர்களது விலையுயர்ந்த கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்தால்தான் அந்த கார்களையே ரெடி பண்ண முடியும் என்பது போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே நடிகர், நடிகைகள், அஜீத், விஜய் ரசிகர்கள் தரப்பிலும் உதவி செய்து வருகின்றனர். பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளனர். சூர்யா, கார்த்தி முதல்கட்டமாக ரூ. 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். கேபிஒய் பாலா, 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் தந்து உதவியுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகை நயன்தாரா மூலம் வேளச்சேரியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்வை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் பீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்களையும் தந்துள்ளனர். அது நயன்தாராவின் சொந்த கம்பெனி தயாரிப்பாக உள்ளது.

இந்நிலையில் அந்த நாப்கினை பெற்றுக்கொண்ட பெண்கள் அனைவரும் வரிசையில் நின்று, அதை முகத்துக்கு நேராக தூக்கி பிடித்தபடி போஸ் தரச்சொல்லி போட்டோ, வீடியோ எடுக்கப்பட்டது, பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி கூட இழிவான, மலிவான விளம்பரம் தேவையா என பலரும் திட்டி வருகின்றனர். இதற்கு ஐடியா கொடுத்தவர் நயன்தாராவின் கணவர், பிரபல திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் என்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்