நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விரைவில் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளதாகஅறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கான தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை.
விஷால் நடிக்க வந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான பல நடிகர், நடிகைகளுக்கு திருமணமாகி விட்டது. பலரும் பிள்ளை, குடும்பம் என செட்டிலாகி விட்டது. விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா கூட சாயிஷாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் விஷால் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியுடன் காதல், இருவருக்கும் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற ஒரு பரபரப்பான பேச்சு, கோலிவுட் வட்டாரத்தில் துவக்கத்தில் இருந்தது. அது நடக்கவில்லை. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பெண்ணுடன் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. அதுவும் நடந்ததாக தெரியவில்லை.
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின், அதில் உள்ள மண்டபத்தில்தான் எனது திருமணம் நடக்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், கட்டிடமும் இன்னும் கட்டவில்லை. அவர் திருமணமும் நடக்கவில்லை. 40 வயதுகளை கடந்த நிலையில், இன்னும் அவர் திருமணத்தை தாமதிப்பது, ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த சூழலில் நேற்று நியூயார்க்கில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவருடன் நடமாட்டமே இல்லாத ஒரு ரோட்டில் விஷால் நடந்து செல்கிறார். அந்த பெண்ணுடன் மிக நெருக்கமாக சிரித்தபடி பேசிச் செல்லும் விஷால், திடீரென திரும்பி பார்த்து அதிர்ச்சியாகி, முகத்தை மூடிக்கொண்டு, அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ காட்சி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது.
இதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதில் விஷால் கூறியிருப்பதாவது, உண்மையை கூறவேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். நான் சோர்வடையும் போது எனது உறவினர்களிடம் செல்வது வழக்கம். அப்படி சென்றிருந்த போது விளையாட்டாக செய்யலாம் என யோசித்தோம். ஏதாவது பிராங்க் செய்யலாம் என நினைத்து, சகோதரர்களுடன் இணைந்து எடுத்த வீடியோ தான் அது. ஆனால் பலரும் அது குறித்து தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். அதற்காக தான் இந்த விளக்கம், என்று அதில் விஷால் கூறியுள்ளார்.





