- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட்டில் படுபிஸியான அஜித் பட இயக்குனர் விஷ்ணுவர்தன்... அடுத்து சல்மான்கானை இயக்குவதால் ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சி...

பாலிவுட்டில் படுபிஸியான அஜித் பட இயக்குனர் விஷ்ணுவர்தன்… அடுத்து சல்மான்கானை இயக்குவதால் ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சி…

- Advertisement -

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்குமாரை, மிக ஸ்டைலாக காட்டிய இயக்குனர் யார் என்றால், அது நிச்சயம் விஷ்ணுவர்தன்தான். பில்லா திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி அஜித்தின் லுக்கை மெருகூட்டிய அவர், ஏகே வை அடுத்த சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷ்ணுவர்தன், குறும்பு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் அவருக்கு சரியாக போகாத நிலையில், அடுத்ததாக அவர் இயக்கிய திரைப்படம்தான் அறிந்தும் அறியாமலும். தந்தைக்கு மகனுக்குமான பாசம், அண்ணன் தம்பிக்கு இடையேயான உறவு, சுவாரஸ்யமான காதல் என ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கினார் விஷ்ணுவர்தன்.

- Advertisement -

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்களும் செம ஹிட் ஆனதால், அறிந்தும் அறியாமலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் ஆர்யாவின் முதல் படமான இந்த திரைப்படம், அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இதையடுத்து மீண்டும் ஆர்யாவுடன் இணைந்த விஷ்ணுவர்தன், பட்டியல் திரைப்படத்தை எடுத்தார்.

பரத், பத்மப்ரியா, பூஜா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையை எடுத்திருந்த விஷ்ணுவர்தன், கிளைமேக்ஸில் வித்தியாசமான முடிவை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

இதன்பிறகு அஜித்தை வைத்து பில்லா படத்தை கொடுத்த அவர், ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக உருமாறினார். பழைய பில்லா திரைப்படத்தின் கதையை அவர் அப்படியே எடுத்து வைத்திருந்தாலும், காட்சிக்கு காட்சி சுவாரசியம் குறையாமல் திரைக்கதையை கொடுத்ததால் வெற்றி பெற்றார் விஷ்ணுவர்தன். பின்னர் அஜித்துடன் மீண்டும் இணைந்து ஆரம்பம் மற்றும் யட்சன் ஆகிய படங்களை விஷ்ணுவர்தன் எடுத்தார்.

இதனிடையே திடீரென பாலிவுட்டுக்கு சென்ற அவர், ஷெர்ஷா படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது அவருக்கு பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டைகர் 3 படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சல்மான்கான், தனது அடுத்த திரைப்படத்தில் விஷ்ணுவர்தன் உடன் இணைகிறார். இந்தப் படத்தை கரன் ஜோகர் தயாரிக்கிறார். நவம்பர் மாதம் ஷூட்டிங் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்