- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘வாத்தியாராக மாறும் குமரேசன்’ - ‘விடுதலை 2’ படத்தின் க்ளைமேக்ஸ் இதுதானா? என்ன செய்வதென்று தெரியாமல்...

‘வாத்தியாராக மாறும் குமரேசன்’ – ‘விடுதலை 2’ படத்தின் க்ளைமேக்ஸ் இதுதானா? என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இயக்குநர் வெற்றிமாறன்

- Advertisement -

கடந்த மார்ச் 31, அன்று இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. காமெடி நடிகரான சூரி, முதன்முறையாக இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ஆனால், படத்தில் சில காட்சிகளே வந்தாலும் வாத்தியார் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிதான் உண்மையான ஹீரோ என, படம் பார்த்த ரசிகர்கள் பலரும் புரிந்துக்கொண்டனர். ஏனெனில், விடுதலை படம், வாத்தியார் என்ற கேரக்டரை மையப்படுத்தி இருந்தது.

விடுதலை படம் முதல் பாகமாக வெளியான நிலையில், படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என, தமிழ் சினிமா ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஏனெனில், முதல் பாகம் படம், நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும், ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடல், டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது. சூரியின் நடிப்பும், பரவலாக பேசப்பட்டது.

- Advertisement -

கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில், நேர்மையான மனிதராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, மற்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் என்ற வாசனையே தெரியாதபடி, நடிப்பில் புது நடிகராக, பக்குவப்பட்ட நடிப்பை தந்து இருந்தார் சூரி. பரபரப்பான நிலையில், முதல் பாகம் முடிவுற்ற நிலையில் 2ம் பாகத்தில் படத்தின் நகர்வு எப்படி இருக்குமோ என, விடுதலை 2 படத்தை காண ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

இந்த சூழலில், விடுதலை 2 படத்தின் க்ளைமேக்ஸ் குறித்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில், தீவிரவாதியான விஜய் சேதுபதியை, சூரி தான் பிடித்துக் கொடுப்பார். 2வது பாகத்தில், விஜய் சேதுபதியை சுட்டுக்கொல்ல வேண்டும் என சூரியை போலீஸ் உயரதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதை சூரி மறுத்த நிலையில், போலீசார் விஜய் சேதுபதியை சுட்டுக் கொல்வதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சூரி, அந்த போலீசாரை கொன்றுவிட்டு காட்டுக்குள் சென்று, அவரும் தீவிரவாதியாக ( அதாவது, விஜய் சேதுபதி இடத்தில், வாத்தியாராக) மாறுவதாகவும் க்ளைமேக்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது, அப்பாவி கான்ஸ்டபிளாக இருந்த குமரேசன், சமூக கோபங்கள் நிறைந்த வாத்தியாராக, மாறுவதே படத்தின் க்ளைமேக்ஸ் டிவிஸ்ட் எனக் கூறப்படுகிறது.

படத்தின் க்ளைமேக்ஸ் இதுதான் என்ற தகவல் பரவியதை அடுத்து, நொந்துபோன இயக்குநர் வெற்றிமாறன், க்ளைமேக்ஸ் காட்சியை வேறுவிதமாக எடுத்து வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல், தீயாக பரவி வருகிறது. அதே வேளையில், இப்படி ஒரு க்ளைமேக்ஸ் இல்லாமல், நெட்டிசன்களே கற்பனையில் இப்படி ஒரு க்ளைமேக்ஸ் என வதந்தியை கிளப்பி விட்டு விட்டார்களோ, என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.

- Advertisement -

சற்று முன்