- Advertisement -
Homeபொழுதுபோக்குநாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு...

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா? – என்ன தலைவரே இப்படி ஆகிப் போச்சே?

- Advertisement -

இந்திய நாட்டின் 18வது தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவுகள், இன்று காலை 8 மணி முதல் வெளியாக துவங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தை பொருத்த வரை, துவக்கத்தில் இருந்தே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பல தொகுதிகளிலும் இதுவரை அறிவிக்கப்பட்ட வகையில், திமுக மற்றும் திமுக கூட்டணி சார்ந்த வேட்பாளர்களே வெற்றிவாகை சூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில், நாடாளுமன்ற வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிட்டார். ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை அவரே துவங்கி, அதற்கு தலைவராக உள்ள அவர், வேலூர் தொகுதியில் வேட்பாளராக மனுதாக்கல் செய்து, தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

- Advertisement -

தேர்தல் பிரசாரத்தில் இறுதி நாளில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடல் நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட ப்ரூட் ஜூஸில் விஷம் கலந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் வேலூரிலும், அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மன்சூர் அலிகான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்பு குணமடைந்தார்.

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், மொத்தம் 2,608 ஓட்டுகள் மட்டுமே பெற்று, டிபாசிட் இழந்துள்ளார். இந்த தொகுதியில் நோட்டா ஓட்டுகளே 8027 பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2.15 லட்சம் ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

சற்று முன்