- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷா இல்லேன்னா சமந்தா தான் எனக்கு மனைவி … இனி அடுத்த விஜயகாந்த் நான்தான்… பிக்பாஸ்...

திரிஷா இல்லேன்னா சமந்தா தான் எனக்கு மனைவி … இனி அடுத்த விஜயகாந்த் நான்தான்… பிக்பாஸ் பிரபலத்தால் உச்சக்கட்ட விரக்தியில் ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் திவாகர். இவர் ஏற்கனவே கஜினி படத்தில் சூர்யா ஒரு காட்சியில் தர்பூசணி சாப்பிடுவது போல நடித்துக் காட்டி பிரபலமானவர். தன்னை வாட்டர் மெலன் ஸ்டார் என்றும் தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் என்றும் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வாட்டர்மெலன் திவாகர் கூறியதாவது, நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே திரிஷா நடிப்பதை பார்த்து ரசித்து வருகிறேன். உண்மையில் நான் அவர்களை விட வயதில் இளையவன். ஆனால் சமூக ஊடகங்களில் எனக்கு அதிக வயது என்று தவறான வதந்தியை பரப்புகின்றனர்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனை விடவும் எனக்கு வயது குறைவுதான். திரிஷாவின் அலை படம் வெளியான போது நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். திரிஷா அல்லது சமந்தா போன்ற ஒரு வாழ்க்கை துணை எனக்கு கிடைக்க வேண்டும். திரிஷா அல்லது சமந்தா போன்ற மனைவி வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக உள்ளது.

நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் சிவாஜி சாருக்கு அப்புறம் கமல்ஹாசன். அவருக்கு அப்புறம் நான்தான். ஒரு ஹீரோவுக்கு உண்டான எல்லா திறமையும் என்கிட்ட இருக்கிறது. ஆனால் என்னை பார்த்து பயந்து நிறைய சூழ்ச்சிகள் செய்றாங்க. விஜய் சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க.

- Advertisement -

மதுரையிலிருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு பெரிய நடிகர் இதுவரைக்கும் வரலே. அந்த இடத்தை நிரப்ப தான் நான் இப்போது வந்திருக்கேன். அவரைப் போலவே அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் நான் ஆவேன். பல அவமானங்கள் கேலி கிண்டல்களைக் கடந்து இப்போது எனக்கு ஹீரோவாக நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இதுவரை யாரும் பார்க்காத ஒரு நடிப்பு அரக்கனை நீங்க சீக்கிரமே வெள்ளித்திரையில் பார்ப்பீங்க என்று வாட்டர்மெலன் திவாகர் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், தமிழ் சினிமாவுக்கு இப்போது மோசமான சோதனை காலமாக இருக்குது போல என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்