தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தனது பயணத்தை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார். இதில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக சந்திரமுகி அமைந்தது.
இங்கிருந்து ஏறு முகத்திலே சென்ற நயனுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் பட்டமும் கிடைத்தது. பல முக்கிய திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இதில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக கோலமாவு கோகிலா மற்றும் அறம் ஆகிய திரைப்படங்கள் அமைந்தன. மாயா திரைப்படமும் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இது இடைவெளியில் தனது காதலர் விக்னேஷ் சிவனை அவர் மணம் முடித்தார். இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
கடந்த ஆண்டு பாலிவுட் திரை உலகிலும் நயன்தாரா அறிமுகம் ஆனார். ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் அவர் ஜவான் திரைப்படத்தின் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் நயன்தாரா பிசியாக இருக்கிறார். குறிப்பாக டெஸ்ட் திரைப்படத்தைக் கூறலாம். மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. இதில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இதுபோக, மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 1960 இல் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதே போல் கேஜிஎப் நாயகன் யஷ் நடிக்கும் டாக்ஸி திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நயன்தாரா நடிக்க வருகிறார். இந்த நிலையில் அவர் முந்தைய காலத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், கஜினி திரைப்படத்தில் தான் நடித்தது தவறான தேர்வு என்று அவர் கூறியிருக்கிறார். அதில் நடித்ததில் தான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தின், சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதில் சூர்யா மற்றும் அசின் சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது குறிப்பிடத்தக்கது.





