- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தில் ஆர்வம் காட்டாத அஜீத்குமார்… ப்ரீ புரடக்சன் பணிகளில் நீடிக்கும் தொய்வு -...

ஏகே 64 படத்தில் ஆர்வம் காட்டாத அஜீத்குமார்… ப்ரீ புரடக்சன் பணிகளில் நீடிக்கும் தொய்வு – தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகுமோ…?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது.

குட் பேட் அக்லி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே நடிகர் அஜீத்குமார் வழங்கி விட்டார். ஏகே 64 படத்தை அவரே டைரக்ட் செய்ய உள்ள நிலையில், வரும் நவம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ரேஸ்களில் தீவிரமாக இருந்து வருகிறது. ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் தொடர்ந்து பிரிட்டன் இத்தாலி போர்ச்சுக்கல் என பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு நடக்கும் கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்க உள்ளார். அதன்பிறகுதான் அவர் சென்னை திரும்புகிறார்.

அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக அஜீத்குமார் இருக்கிறார். அவருக்கு கீழ் உறுப்பினர்களும் உள்ள நிலையில் அவர் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதில் சில போட்டிகளில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணி வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் போட்டிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் மொட்டையடித்த நிலையில் காணப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

- Advertisement -

வருகிற நவம்பரில் ஏகே 64 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அஜீத்குமார் தரப்பில் இருந்து இன்னும் தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அஜீத்குமாரை பொருத்த வரை இப்போதைக்கு கார் ரேஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்; முக்கியத்துவம் தருகிறார். ஏகே 64 படம் குறித்த அப்டேட் தரலாமா என்றால், இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்கள், மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் லொக்கேஷன் பார்ப்பது சம்பள அட்வான்ஸ் என ஏகப்பட்ட ப்ரி புரடக்சன்ஸ் பணிகள் உள்ள நிலையில் அஜீத்குமாரின் அலட்சியத்தால் அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன.

- Advertisement -

சற்று முன்