இயக்குனர் பாரதிராஜா மறைவை தொடர்ந்து அவரது சீடர் இயக்குனர் கே பாக்யராஜூம் திடீரென மறைந்து விட்டார். குருநாதர் மறைந்த 17 நாட்களில் அவரது சீடரும் மறைந்தது தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மறைந்த இரண்டு ஜாம்பவான்களுக்காக ராஜகோபுரங்களுக்கு நினைவு உற்சவம் என்ற நிகழ்வு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பெப்சி அமைப்பு தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றன. ஆனால் இதில் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர்களை இந்த நிகழ்ச்சியில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி நிராகரித்தாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம், சமீபத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் சேரன் தலைமையிலான ஒரு அணியும், விசி குகநாதன் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது. இதில் சேரன் அணி வெற்றி பெற்று விசி குகநாதன் அணி தோல்வியடைந்தது. விசி குகநாதன் அணி ஆர்கே செல்வமணியின் ஆதரவு அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி காரணமாக சேரன் தலைமையிலான திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை நிராகரித்ததாக புகார் எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் இயக்குனர் கே பாக்யராஜ் கடைசி வரை இருந்தது திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத முறையும் அவர் மீண்டும் தலைவராக வேண்டும் என்றுதான் விரும்பியதாக கூறப்பட்டது.
கே பாக்யராஜின் உண்மையான அடையாளமே அவர் ஒரு எழுத்தாளர். ஸ்கிரிப்ட் ரைட்டர். இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என்று பெயர் பெற்றவர். ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்த அவரை பாரதிராஜா உதவி இயக்குனராக்கி பிறகு படங்களில் நடிக்கவும் வைத்தார். அதனால் திரைக்கதை எழுத்தாளர் என்பதுதான் கே பாக்யராஜின் உண்மையான முதல் அடையாளமாக உள்ளது.
தனது குருநாதர் கே பாக்யராஜ் மறைவின் போது கூட அவரது புகைப்படத்துக்கு பேனா மாலை அணிவித்தவர் இயக்குனர் பார்த்திபன். அதே போல் பெரிய சைஸ் பேடு பேனாவை அவரது அடையாளமாக அங்கு வைக்க செய்தவர். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பார்த்திபன். அவராவது திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு இல்லாமல் கே பாக்யராஜின் நினைவு கூட்டத்தை நடத்துவது தவறு என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





