- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாரும் ஏன் உன்னை "பண்ணி மூஞ்சி வாயன்னு கிண்டல் பண்றாங்க"? கண்ணீர் விட்ட யோகி பாபுவின்...

எல்லாரும் ஏன் உன்னை “பண்ணி மூஞ்சி வாயன்னு கிண்டல் பண்றாங்க”? கண்ணீர் விட்ட யோகி பாபுவின் தாய் – அதற்கு யோகி பாபு சொன்ன பதில்

- Advertisement -

சின்னத்திரையில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஒரு காமெடியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறிய சிறிய வேடங்களில் நடித்து அதன்பிறகு வெள்ளி திரைக்கு வந்தவர் நடிகர் யோகி பாபு. 2009 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் “யோகி” என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவருக்கு “யோகி பாபு” என்ற பெயர் அப்படியே நிரந்தரமாகியது. அதன் பிறகு சின்ன சின்ன படங்களாக நடித்த அவர் “கலகலப்பு” படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்றார். அதற்கு அடுத்து பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமே, காக்கா முட்டை, கிருமி, ஆண்டவன் கட்டளை என அடுத்தடுத்த வெற்றி படங்கள் அவரது கரியரை உயர்த்தின. மேலும் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு “கோலமாவு கோகிலா”, “பரியேறும் பெருமாள்”, “கூர்கா”, “தர்பார்” என தொடர்ச்சியாக அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான்.

Yogi-Babu-2

அதன் பின்னர் தளபதி விஜய்யில் துவங்கி, தல அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். அதோடு வளர்ந்து வரும் கதாநாயகர்களுடனும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமா வெளியாகும் படங்களின் யோகி பாபு இல்லாத படம் எது என்று கேட்டால் அதனை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு அவர் முன்னணி கதாநாயகர்களின் அனைத்து படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அதோடு “கூர்க்கா” “மண்டேலா” போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

- Advertisement -

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள “மாவீரன்” படத்தில் கூட யோகி பாபுவின் காமெடி பேசப்பட்டு வருகிறது. அதோடு இதற்கு அடுத்து திரைக்கு வரவிருக்கும் ஷாருக்கானுடன் “ஜவான்” ரஜினிகாந்த் உடன் “ஜெய்லர்” அயலான் என பெரிய படங்களிலும் யோகி பாபு நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமா உலகின் உச்சகட்ட காமெடியனாக தற்போது உயரத்தில் இருக்கும் யோகி பாபு இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கான வாழ்த்துக்களையும் திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யோகி பாபுவின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்வில் நடந்த சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தின் மூலம் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் யோகி பாபு தனது தாயுடன் தியேட்டர் சென்று படம் பார்த்த ஒரு அனுபவம் குறித்த செய்தி வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் மெல்ல மெல்ல முன்னேறி வந்த அவர் “யாமிருக்க பயமேன்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் முகம் தெரிந்த பிரபலமாக மாறினார்.

- Advertisement -

அந்த படத்தின் ஒரு காட்சிக்கு தான் அவரது அம்மாவையும் திரையரங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார் யோகி பாபு. அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவரை பண்ணி மூஞ்சி வாயா என்று அழைக்கும்படியே பல காட்சிகள் இருந்தன. இதனை பார்த்த யோகி பாபுவின் அம்மா : உன்னை ஏன் எல்லோரும் “பன்னி மூஞ்சி வாயா” என்று அழைத்தார்கள்? நீ அழகாக தான் இருக்கிறாய் என்று கூறி திரையரங்கிலேயே கண்ணீர் விட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த யோகி பாபு : இது ஒரு திரைப்படம் தான். நகைச்சுவைக்காக தான் என்னை அவ்வாறு கூறுகிறார்கள் என்று ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றுள்ளார். இப்படி படிப்படியாக முன்னேறிய அவர் இன்று இந்தியா முழுவதும் உள்ள பெரிய பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக காமெடியில் கைகோர்த்து அசத்தி வருவதில் அவரது தாய் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்