- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்தி வீரன் சர்ச்சையில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம், இதுக்கு மேல ஞானவேல் ராஜா வாய்...

பருத்தி வீரன் சர்ச்சையில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம், இதுக்கு மேல ஞானவேல் ராஜா வாய் திறக்கறதே வேஸ்ட் – அமீருக்கு இது ஒண்ணே போதுமே

- Advertisement -

இயக்குநர் அமீர், நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்திக்கு ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை உருவாக்கித் தந்த படம் பருத்தி வீரன். ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சித்தும், அதுபற்றி கார்த்தியோ, சூர்யாவோ, சிவக்குமாரோ எதுவும் பேசாமல், தன்னிலை விளக்கம் தராமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தி வீரன் படத்தில் நடித்த பல நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இன்னும் சம்பளமே போய் சேரவில்லை என்ற தகவலும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அதில் பல வயதானவர்களும் நடித்த நிலையில், நடித்ததற்கான சம்பளத்தை பெற 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

பருத்திவீரன் படம் தன்னுடைய தயாரிப்பு என்று சொல்லும் ஞானவேல் ராஜா, அந்த படம் ரிலீஸ் ஆகும் போது பெரிய பிரச்னை ஏற்பட்டு, 3 முறை ரிலீஸ் தள்ளிப் போனது. அண்ணன் சூர்யா தான், தன்னுடைய சேமிப்பு பணம் மொத்தத்தையும் கொடுத்து பருத்திவீரன் படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் என்கிறார் கார்த்தி.

ஆனால், அந்த படத்தை எடுத்து முடிக்க, பல பேரிடம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை என கடன் வாங்கி இருக்கிறார் என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு என ஒரு பெரிய தொகையை கடனாக அமீருக்கு வழங்கியவர் சசிக்குமார் என்ற உண்மையும் வெளியே வந்துள்ளது. இவர்கள் யாருக்கும் பணம் திருப்பித் தரவில்லை. அமீருக்கும் பணம் தரவில்லை. பிறகு சூர்யா மொத்த சேமிப்பு பணத்தையும் யாருக்கு கொடுத்தார் எனத் தெரியவில்லை.

- Advertisement -

இந்நிலையில், பருத்தி வீரன் படத்தின் தணிக்கை சான்றிதழை பத்திரிகையாளர்பிஸ்மி வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் தயாரிப்பாளர் என ஸ்கிரீன் ஸ்டுடியோ பெயர் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, உண்மையான தயாரிப்பாளராக இயக்குநர் அமீரின் டீம் ஒர்க் புரடெக்சன் ஹவுஸ் என்றுதான் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் படத்தின் தயாரிப்பாளர் அமீர்தான் என்பது உறுதியாகி விட்டது.

பருத்திவீரன் படத்தின் படத்தின் தயாரிப்பாளர் அமீர்தான் என அரசு தரப்பில் வழங்கப்பட்ட சென்சார் போர்டு சர்டிபிகேட்டே உறுதிபடுத்திய நிலையில், படத்தை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டு, பணத்தை தராமல் அமீரை 17 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஞானவேல் ராஜா, இனியும் வாய் திறந்தால் நன்றாக இருக்காது. இனியாவது அமீரை மரியாதை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என, நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்