- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனின் நம்பிக்கைக்கு உரிய பெண்ணாக மாறிய பிரபல நடிகரின் மனைவி - கமல் தந்த...

நடிகர் கமல்ஹாசனின் நம்பிக்கைக்கு உரிய பெண்ணாக மாறிய பிரபல நடிகரின் மனைவி – கமல் தந்த புராஜெக்ட்டுக்காக அமெரிக்கா சென்ற பயண ரகசியம்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு புராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக 20 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் வில்லனாக கமல் நடிக்கிறார். இந்த படத்துக்காக கமல் சம்பளம் ரூ. 150 கோடி பேசப்பட்டுள்ளது.

இந்த படங்களை அடுத்து, கமல் நடிக்கும் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டு, அரசியல் பணிகளிலும் கமல் ஈடுபட திட்டமிட்டுள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் இந்த படம் 2025ம் ஆண்டின் மத்தியிலோ, அல்லது ஆண்டின் இறுதியிலோ படப்பிடிப்பை துவங்கலாம் என கமல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தக்லைப் படத்தில் சாக்குத்துணி போன்ற உடையலங்காரத்தில் கமல்ஹாசன் நடித்த டீசர், கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியானது. நான்தான் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், காயல்பட்டணத்துக்காரன் என்று அவர் பேசிய வசனம் டிரண்டிங் ஆனது. இந்த டீசரில் அவரது காஸ்ட்யூம் கவனிக்கப்பட்டு அதுவும் வைரலானது.

தக்லைப் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக இருப்பவர் அமிர்தா ராம். இவர்தான் இந்த சாக்குப்பை ஆடையை கமலுக்கு தக்லைப் படத்துக்காக வடிவமைத்து தந்துள்ளார். இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனரும் இவர்தான். இப்போதைக்கு கமலின் அதிக நம்பிக்கைக்கு உரிய பெண்ணாகவும் இவர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த அமிர்தா ராம், நடிகர் ராம்ஜி அதாவது வெள்ளரிக்கா, பிஞ்சு வெள்ளரிக்கா படத்தில் நடனமாடிய டான்ஸ் நடிகர் ராம்ஜியின் மனைவிதான். ஒரு காலகட்டத்தில் ராஜ் டிவியில் ரமணி வெர்சஸ் ரமணி என்ற காமெடி தொடரில், இப்போதைய நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, ராம்ஜி செய்த அலப்பரைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இதே ராஜ்டிவியில் அமிர்தாவும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.

இப்போது கமல் செய்யப் போகும் ஒரு பிஸினஸ் விஷயமாக, அதுசார்ந்த முன் ஏற்பாடுகளை செய்ய அமிர்தா ராம், அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால், தக்லைப் படத்தின் காஸ்ட்யூம் குறித்தே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதாக சொல்லப்பட்டாலும் கமல் தந்த ஸ்பெஷல் புராஜெக்ட்டும் இதில் அடங்குகிறது. டூ இன் ஒன் வேலையாக அமெரிக்கா சென்றுள்ள அமிர்தா ராம் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்