- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் திரைப்படத்திற்கு முன்பாகவே இந்தப் படத்தை இயக்குகிறாரா ஹெச். வினோத்... என்ன நடக்குதுன்னு புரியலையேப்பா?...

கமல் திரைப்படத்திற்கு முன்பாகவே இந்தப் படத்தை இயக்குகிறாரா ஹெச். வினோத்… என்ன நடக்குதுன்னு புரியலையேப்பா?…

- Advertisement -

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் ஹெச். வினோத். முதல் திரைப்படத்திலேயே, மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாற்று வேளையில் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை தோல் உரித்து காட்டினார் வினோத். நிஜ வாழ்க்கையில் நடப்பதை அப்படியே திரையில் காட்டியதால், சதுரங்க வேட்டையில் மக்கள் கொண்டாடினார்கள்.

அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனம் தான். கோழி மேல பரிதாபப்பட்டால் சிக்கன் 65 சாப்பிட முடியாது போன்ற வசனங்கள் கூர்மையாக இருந்ததால் சதுரங்க வேட்டை மிகப்பெரிய அளவில் கவனிக்கபட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு வினோத்தின் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்ப, கார்த்தியுடன் அவர் இணைந்தார்.

- Advertisement -

போலீஸ் ஸ்டோரியை கையில் எடுத்த அவர் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். 2000 ஆண்டுகளில் வட மாநில கொள்ளைகள் எப்படி தமிழகத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்பதையும், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் பட்ட பாட்டையும் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் வினோத். கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையில் மேற்கொள்ளும் யுக்திகள் ரசிகர்களை யோசிக்க வைத்தன.

காவல்துறை அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்திய கார்த்தி, மிடுக்கான நடிப்பின் மூலம் கவனம் இருப்பார். இப்படியாக தனது முதல் இரண்டு படங்களின் மூலம், வினோத்தின் கிராப் வேறு ஒரு உயரத்திற்குச் சென்றது. இப்படியான சூழலில் அஜித்குமார் உடன் அவர் இணைந்தார். ஆனால் இந்த முறை அவரது சொந்தக் கதையாக இல்லாமல் பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கை வினோத்திற்கு கொடுத்தார் அஜித் குமார்.

- Advertisement -

நேர்கொண்ட பார்வையாக உருவான அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பிறகு அஜித் குமார் வினோத் கூட்டணியில் வலிமை திரைப்படம் உருவானது. கொரோனா காலகட்டத்தால் அதன் வேலைகள் தாமதமாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் வெளியாகி தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்த வினோத், துணிவு திரைப்படத்தை இயக்கினார். இது வசூல் ரீதியாக கவனம் பெற்றது.

இதைத்தொடர்ந்து அவர் கமலுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை ஏற்கனவே கமல் எழுதி வைத்த தலைவன் இருக்கிறான் படத்தின் கதைதான் என்று கூறப்படுகிறது. இதற்கு திரைக்கதை எழுதும் பணியில் மட்டும் வினோத் கவனம் செலுத்த இருக்கிறாராம். இதன் சூட்டிங் இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில, தற்போது மணிரத்னம் உடனான தக்லைப் படத்தை முடித்த பிறகு வினோத்துடன் சேர கமல் முடிவு செய்துள்ளாராம். இந்த இடைவெளியில், தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் வினோத். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாக கூறப்படும் நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்