- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அப்படி ஒரு முடிவுக்கு வர அதுதான் காரணம், கடைசியில் எனக்கே அது வம்பாக மாறிவிட்டது...

நான் அப்படி ஒரு முடிவுக்கு வர அதுதான் காரணம், கடைசியில் எனக்கே அது வம்பாக மாறிவிட்டது – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜய் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு வில்லனாகவும் நடிப்பார். அதே வேளையில் மாமனிதன் போன்ற படத்தில், கழிவறை சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளியாகவும் நடிப்பார்.

நடிப்பில் எந்தவிதமான பாகுபாடும் காட்டாத அவரது ஒரே ஒரு நோக்கம், ஒரு கலைஞனாக தான் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதாக தான் இருந்திருக்கிறது. அதனால்தான் ஆரம்ப காலத்தில், புதுப்பேட்டை போன்ற படங்களில் 10 பேரில் ஒருவராக கும்பலில் நின்றும் நடித்தார்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பதோடு நின்று விடாமல் கடைசி விவசாயி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார். அதில் கேமியோ ரோலிலும் நடித்து படத்துக்கு ஆதரவாக தனது பங்களிப்பையும் தந்தார். இப்படி மற்ற ஹீரோக்களின் பல படங்களில் கேமியோ ரோல் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், சமீபத்தில் மேரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, ஹீரோ, வில்லன், கெஸ்ட் என பல ரோல்களில் மாறி மாறி நடித்தேன். இது பயமாக இருந்தாலும் மற்ற நடிகர்களின் படங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்கு சென்று நான் நடிப்பது, அந்த படத்தின் வெற்றிக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்று மட்டும்தான் நினைத்தேன்.

- Advertisement -

ஏனெனில் நடிப்பதுதான் நமது பிழைப்பு. இதில் தவறாக ஏதும் செய்யவில்லை என்று இதில் வேறு மாதிரியான பார்வை எனக்கு இருந்தது. ஆனால் தொடர்ந்து இதே மாதிரியாக நடிக்க பலரும் என்னை அணுகினர். அதனால் 20க்கும் மேற்பட்ட கெஸ்ட் ரோல்களில் நடிக்க நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் ஒரு கட்டத்தில், நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கே அது பாதிப்பாக மாறிவிட்டது.

அதனால் இனிமேல் கெஸ்ட் ரோல், வில்லன் ரோல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போதும் ஒரு சிலர் கதை கேட்டுவிட்டு சொல்லுங்க என வர ஆரம்பித்துவிட்டனர். இப்படி மணிக்கணக்கில் அமர்ந்து கதை கேட்க நேரமில்லை. அதனால்தான், கோவா திரைப்பட விழாவில் இனி வில்லன், கெஸ்ட் ரோல்களில் நடிப்பதே இல்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டேன், என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்