- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் இயக்கும் ரஜினி படத்தை தயாரிக்க போறது யார்…? - அங்கே தான் நிற்கிறார்...

மாரி செல்வராஜ் இயக்கும் ரஜினி படத்தை தயாரிக்க போறது யார்…? – அங்கே தான் நிற்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை, லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம் வேட்டையன். இந்த படம் ரஜினிகாந்தின் 170வது படம். இதைத்தொடர்ந்து அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த படத்துக்கான ஸ்கிரிப்டை லோகேஷ் கனகராஜ் பரபரப்பாக எழுதிக்கொண்டு இருக்கிறார்.

இன்னும் மூன்று மாதங்களில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டு, மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தின் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிப்பதற்காக நடிகர், நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது

- Advertisement -

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஜீவன், இந்தி நடிகர் ரன்வீர் கபூர் போன்றவர்கள் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டாலும், இன்னும் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த படத்தை ஜெயிலர் படத்தை காட்டிலும் மாஸ் ஆக கொண்டு வர லோகேஷ் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது புதிய திருப்பமாக இன்று ஒரு அதிரடி தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதாவது ஜெயிலர் 2 படத்துக்கு முன்பே, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், மாரி செல்வராஜ் சொன்ன கதை ரொம்பவும் பிடித்துப் போய் லோகேஷ் கனகராஜ் படம் முடிச்ச உடனே, இந்த படத்தை நாம டெபனெட்டா பண்றோம் என்று மாரி செல்வராஜிடம் ரஜினி சந்தோஷமாக கூறியிருக்கிறார்.

இந்த படத்தை முதலில் ரெட் ஜெயிண்ட் மூவி தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க முடிவாகி இருக்கிறது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் என்றால் தேவையற்ற விமர்சனம் வரும். அதனால், இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் என்பதும், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் விஜயும் முக்கிய பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்தான்.

- Advertisement -

சற்று முன்