- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நாளில் நடிகர் ராஜ்கிரணின் உறவை துண்டித்த நடிகர் அஜீத்குமார் - ஆனா இந்த...

ஒரே நாளில் நடிகர் ராஜ்கிரணின் உறவை துண்டித்த நடிகர் அஜீத்குமார் – ஆனா இந்த விஷயத்துல ஏகே இப்படி கரடுமுரடா நடந்துக்கலாமா?

- Advertisement -

நடிகர் ராஜ்கிரண் பிரபல நடிகராக 1980, 90களில் இருந்தவர். என் ராசாவின் மனசிலே படத்தில் மாயாண்டி கேரக்டரில் வாழ்ந்திருந்தார். தொடை தெரிய ஏத்தி கட்டிய வேட்டியும், இறுக்கமான சட்டையும், கையில் சாட்டை குச்சியும், சாராய பாட்டிலும், முறுக்கு மீசையும், சிவந்த கண்களும் என, கிராமத்தான் கெட்டப்பில் ராஜ்கிரண், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், பாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையற பூமி, தலைமுறை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த படங்களும் பேசப்பட்டன. அதன்பிறகு கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

சண்டக்கோழி, சண்டக்கோழி 2, ப. பாண்டி, முனி, பாண்டவர் பூமி, வேங்கை, மஞ்சப்பை, தவமாய் தவமிருந்து, ரஜினி முருகன், விருமன், காவலன், கொம்பன் போன்ற பல படங்களில் அப்பா, தாத்தா கேரக்டர்களில் ராஜ்கிரண் நடித்தார். இதில் சண்டக்கோழி படத்தில் ராஜ்கிரணின் துரை கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சண்டக்கோழி 2 படத்திலும் அதே கேரக்டரில் நடித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜீத்குமாருடன் கிரீடம் படத்தில் ராஜ்கிரண் நடித்தார். போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில், அஜீத்குமாருக்கு அப்பாவாக நடித்திருப்பார். மகனையும் போலீசாக்க வேண்டும் என ஆசைப்படுவார். சரண்யா பொன்வண்ணன், திரிஷா, விவேக், ஹனீபா, சத்யன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், அஜீத்குமாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த போது அஜீத்குமாருக்கும், ராஜ்கிரணுக்கும் நல்ல நட்பும், பழக்கமும் ஏற்பட்டது. நாளடைவில் அப்பா, மகன் போல இருவரும் நெருக்கமாக பழகினர். ராஜ்கிரண் வீட்டுக்கு செல்வது, சில மணி நேரம் அவருடன் நேரத்தை கழிப்பது என அஜீத், ராஜ்கிரணுடன் மிகவும் இணக்கமாக இருந்தார்.

அந்த சூழலில் நடிகர் ராஜ்கிரண், நிறைய கடன்களுக்கு வட்டி கட்டிக்கொண்டு சிரமப்பட்டார். அவர் தயாரிப்பாளராகவும் இருப்பதால் பல கோடி கடனில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தார். அப்போது அஜீத்குமார் நடிப்பில் படம் தயாரித்தால், கடன்களில் இருந்து மீண்டுவிடலாம் என கருதிய ராஜ்கிரண், நடிகர் அஜீத்குமாரிடம், நீங்கள் எனக்கு ஒரு படம் செய்து தர முடியுமா என கோரிக்கையாக கேட்டிருக்கிறார். அந்த ஒரு நாளில், ராஜ்கிரண் நட்பை துண்டித்து விட்டார் நடிகர் அஜீத்குமார். தன்னிடம் நெருக்கமாக பழகுபவர்கள், தன்னிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது என்ற கொள்கை கொண்டவர் அஜீத் என்ற இந்த தகவலை கூறியிருக்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன்.

- Advertisement -

சற்று முன்