நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டவர் தனுஷ். ப பாண்டி திரைப்படம் தனுஷ் இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளியானது. இளம் வயது காதலையும், அது முதியோர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதலையும் கண் முன்னே விரிவுபடுத்தி இருந்தார் நடிகர் தனுஷ்.
ராஜ்கிரன் ரேவதி ஆகியோர் தங்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்திருந்தனர். சான் ரோல்டானின் பாடல்களும் படத்தில் பட்டையை கிளப்ப, பலரின் ஃபேவரிட் படமாக அது அமைந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட நாட்களாக இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார் நடிகர் தனுஷ். இப்படியான சூழலில் அவர் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இதில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த சூட்டிங்கை முடித்து தனுஷ் அடுத்த படத்திற்கு நடிக்க செல்வார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் படத்தை இயக்கச் சென்றார் தனுஷ். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் இதன் சூட்டிங் நடைபெற்றுள்ளது.
இதில் தனுஷின் மருமகன் வருண், லியோ படத்தில் நடித்திருந்த மேத்யூ உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது குறித்து பேசி அவர், ராஜா ராணி மயக்கம் என்ன ஆகிய படங்களைப் போன்ற ஆல்பத்தை இதில் நீங்கள் எதிர்பார்க்கலாம். 2K கிட்ஸ் களுக்கு பர்பெக்ட்டான ஆல்பம் ஆக இது இருக்கும். இந்த திரைப்படத்திற்காக நானும் தனுஷும் தனியாக அமர்ந்து வேலை செய்தோம் என்று பேசி இருக்கிறார்.





