- Advertisement -
Homeபொழுதுபோக்குஆப்ரேஷன் முடிஞ்சும் இவர் இன்னும் திருந்தல மாமா... மீண்டும் சேட்டையை ஆரம்பித்த ஏகே... என்னா தல...

ஆப்ரேஷன் முடிஞ்சும் இவர் இன்னும் திருந்தல மாமா… மீண்டும் சேட்டையை ஆரம்பித்த ஏகே… என்னா தல என அலுத்துக் கொள்ளும் ரசிகர்கள்…

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சரி இன்று வரை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனிடையே படத்திற்கான அறிவிப்பு வெளியான நாள் முதல், சூட்டிங் தொடங்கப்பட்ட நாள் வரை ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு விடாமுயற்சிக்கான படப்பிடிப்பு தொடங்கியது.

- Advertisement -

இந்த இடைவெளியில் படத்திற்கான திரைக்கதையை அமைப்பதில் இயக்குனர் மகிழ் திருமேனி தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் காரணமாக சொல்லப்பட்டாலும், சூட்டிங் காலதாமதத்திற்கு பின்னணியில் அஜித் தான் இருந்ததாக பலரும் பேசி வந்தனர். சூட்டிங்கிற்கான தேதி குறித்த பிறகும் அவர் பைக் டூர் சென்றதாலேயே இந்த நிலைமை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு ஏற்றார் போலவே அஜித்தும் செயல்பட்டு வந்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பைக்கில் டூர் சென்ற அவர், அடுத்ததாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்ய ஆரம்பித்தார். ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அவர் பைக் டூர் மேற்கொண்டார்.

- Advertisement -

இதனால் தயாரிப்பு நிறுவனம் முதல் பலரும் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். படத்தில் கமிட் ஆகி கொண்டு இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான சூழலில் ஒரு வழியாக பைக்கை ஓரம் கட்டிய, படப்பிடிப்பிற்கு செல்ல ஆரம்பித்தார். அஜர்பைஜான் நாட்டிலேயே பெரும்பாலான சூட்டிங் நடத்தப்பட்டது.

தற்போது படப்பிடிப்புக்கு சிறிய இடைவேளை விடப்பட்டுள்ள சூழலில், மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி வருகிறார் அஜித்குமார். தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பைக்கில் ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான், காதருகே மூளைக்குச் செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதாக கூறி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்படியான சூழலில் அஜித்திற்கு பைக் டூர் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்