- Advertisement -
Homeபொழுதுபோக்குமனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கமல்ஹாசனை பரிசோதிக்க வேண்டும் - திமுகவுக்கு வாழ்க்கைப்பட்டு அசிங்கப்பட்ட...

மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கமல்ஹாசனை பரிசோதிக்க வேண்டும் – திமுகவுக்கு வாழ்க்கைப்பட்டு அசிங்கப்பட்ட ஆழ்வார்பேட்டை ஆண்டவர்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து, இன்று 70 வயதுகளை தொடும் நிலையிலும், தமிழ் சினிமாவில் உலக நாயகனாகவும், இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். 6 வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் பயணித்தவர் என்ற பெருமை கொண்டவர்.

சினிமாவை பொருத்த வரை கமல் மிகப்பெரிய ஜீனியஸ் என்பதை யாருமே மறுக்க முடியாது. அவர் தொட்ட உயரங்களை யாரும் நெருங்க கூட மட்டுமல்ல, நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதுதான் மாபெரும் உண்மை. அந்தளவுக்கு சினிமாவில் தன்னிகரற்ற ஒரு கலைஞனாய் தன்னை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்தவர். இப்போதும் ஒரு நடிகராக அவரை மிஞ்ச யாருமே இல்லை.

- Advertisement -

ஆனால் சொந்த வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் கமலை போல மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் தமிழ் சினிமாவில் யாருமே இருக்க முடியாது. இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்தவர். கௌதமியுடன் தாலி கட்டாமல் 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தியவர். சிம்ரன், பூஜாகுமார், ஆண்ட்ரியா என பல பெண்களுடன் இந்த வயதிலும் தொடர்பு என்று வாழ்பவர்.

திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை கடந்த 2016ம் ஆண்டில் துவங்கிய கமல்ஹாசன், அரசியலிலும் ஒரு நாயகனாக வலம்வர ஆசைப்பட்டார். ஆனால் அவரை தமிழக அரசியல் களம், கோமாளியாக்கி விட்டது. முதலில் திமுகவை எதிர்த்தவர், ஸ்டாலினை விமர்சித்தவர் இன்று ராஜ்ய சபா எம்பி சீட்டுக்காக கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறார்.

- Advertisement -

இப்போது திமுக கூட்டணியில் உள்ள கமல், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். கமல்ஹாசன் கேட்டு அவருக்கும், அவரது கட்சிக்குமே ஓட்டுப் போடாத மக்கள், இவர் பரிந்துரை செய்து திமுகவுக்கு ஓட்டுப் போடுவார்களா என ஸ்டாலினும் யோசிக்கவில்லை. கமல்ஹாசனும் யோசிக்கவே இல்லை.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்றச் சொன்ன கமல்ஹாசனை, மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையில் நன்றாக இருக்கிறாரா, இடது வலது மூளை சரியாக செயல்படுகிறதா, சுய நினைவோடு இருக்கிறாரா, சரியாக சாப்பிடுகிறாரா என பரிசோதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்த அரசியலும், அசிங்கமும் நமக்கு தேவையா ஆண்டவரே என, கமலின் ரசிகர்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்